Posts

Showing posts from April, 2024

அனுமன் சாலீஸா & பாராயண முறை

Image
    Hanuman Chalisa in Tamil ? அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும். தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உடனே வந்து சேரும் என்கிறார் துளசிதாசர். அனுமன் சாலீசா என்ற பெயரில் அவர் எழுதிய வடமொழி ஸ்லோகத்தின் தமிழாக்கம் இது! ராமநாமம் சொல்லி வென்ற மாருதியின் திருநாமம் சொல்லி வெல்லுங்கள்.   Hanuman Chalisa  Parayanam Procedure in Tamil அனுமன் சாலீஸா பாராயண முறை ? உடலைத் தூய்மைப்படுத்திக் கொண்டு தூய ஆடை அணிந்து தூய உள்ளத்துடன் ஆஞ்சநேயரைத் தியானிக்க வேண்டும். நெய் விளக்கேற்றி தூபம் காட்டியபின் பதினொரு முறை இந்த நாற்பது துதிகளையும் அன்புடன் ஓத வேண்டும். நூறு முறை ஓதுவது சிறப்பு. ஒவ்வொரு முறை முடியும் போதும் ஆஞ்சநேயரின் திருப்பாதங்களில் மலர்களைச் சமர்ப்பிக்க வேண்டும். ? கோவிலிலோ வீட்டின் தூய்மையான இடத்தில் ஆஞ்சநேயர் படத்தின் முன்னாலோ பாராயணம் செய்யலாம். செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் பாராயணம் செய்ய வேண்டும். பக்தியுடனும் அன்புடனும் ஹனுமன் சாலீஸா பாராயணம் செய்யப்பட்டால் நினைத்தது நடக்கும் என்பது பெரியோர் கூற்று. அவரது அருளால் எதுவும் நடக்க...