மே மாதத்தில் நல்லது நடக்க சொல்ல வேண்டிய மந்திரம்

[ad_1] - Advertisement - நம்முடைய வழிபாட்டு முறைகளில் ஒவ்வொரு நாள் திதி இவற்றுக்கெல்லாம் எப்படி முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதே போல் ஒவ்வொரு மாத பிறப்பிற்கும் முக்கியத்துவம் உண்டு. ஒவ்வொரு மாதம் பிறக்கும் நாளில் நாம் ஒரு சில தெய்வங்களை வணங்குவதன் மூலம் அந்த மாதம் முழுவதும் சிறப்பான பலனை பெற முடியும். அப்படியான ஒரு சூட்சும வழிபாட்டு முறையை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். மே மாதத்தில் நல்லது நடக்க மந்திரம் மே ஒன்றாம் தேதியானது சித்திரை மாதத்தில் துவங்கும். சித்திரை என்றாலே அது சூரிய பகவானுக்குரிய மாதமாக தான் கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த மாதத்தில் தான் அக்னி நட்சத்திரம் துவங்கும் சூரியன் உக்கிரமாக இருக்கும். இந்த நேரத்தில் நாம் சொல்லக் கூடிய இந்த மந்திரமானது சூரிய பகவானை குளிர்விக்கும் விதமாக அமையும் என்று சொல்லப்படுகிறது. - Advertisement - இதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் அனைத்து துன்பங்களையும் நீக்கி நல்லது நடக்கக் கூடிய யோகங்களை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. இந்த மந்திர வழிபாட்டை மே மாதம் முதல் தேதி அன்று துவங்கி விட வேண்டும். ஒன்றாம் தேதி துவங்கி மே மாதம் இறுதிக்குள் இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். அதற்கு மேல் இந்த மந்திரத்தை சொன்னால் பலன் கிடையாது. அதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது சொல்ல வேண்டிய மந்திரத்தை பார்க்கலாம். ஓம் ஆதித்யாய நமஹ இந்த மந்திரத்தை 1111 முறை சொல்ல வேண்டும் இது தான் மிகவும் முக்கியம். அதாவது ஒன்றாம் தேதி தொடங்கி இந்த மே மாதத்தின் கடைசிக்குள் நீங்கள் 1111 முறை சொன்னால் போதும். இந்த மந்திரத்தை சொல்லும் போது வீட்டில் தீபம் ஏற்றி வைத்து விட்டு அதன் முன் அமர்ந்து சொல்லலாம். நல்ல பலனை பெறலாம் அப்படி முடியாத பட்சத்தில் பணி செய்யும் இடத்தில் அமர்த்தும் சொல்லலாம். - Advertisement - வண்டி வாகனங்களில் செல்லும் போது மட்டும் இந்த மந்திரத்தை சொல்லக் கூடாது. பெண்கள் மாத விலக்கான நேரத்தில் கூட இந்த மந்திரத்தை சொல்லலாம் தவறில்லை. எங்கு அமைதியான சூழ்நிலை உள்ளதோ அங்கு உங்களால் அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்ல முடியும் என்று தோன்றினால் அங்கு அமர்ந்து சொல்லுங்கள். நிச்சயம் மந்திரத்திற்கான பலனை முழுமையாக பெறலாம். இதையும் படிக்கலாமே: குரு பெயர்ச்சி அன்று சொல்ல வேண்டிய மந்திரம் இந்த மே மாதம் முழுவதும் உங்கள் குடும்பத்திற்கு நல்லவை எல்லாம் தொடர்ந்து நடக்க இந்த ஒரு மந்திரம் உதவியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த மந்திரத்தை சொல்லி சூரிய பகவானின் அருளாசியை முழுவதுமாக பெற்று நல்லதொரு வாழ்க்கையை வாழ வழி தேடி கொள்ளுங்கள். - Advertisement - [ad_2] https://nithyasubam.in/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%ae%e0%af%87-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d/?feed_id=33&_unique_id=6633500e444df

Comments

Popular posts from this blog

லலிதா நவரத்தின மாலை: Lalitha Navarathna Malai Lyrics

Avanithanile Piranthu Lyrics in Tamil

ஹர ஹர சிவனே அருணாசலனே: Hara Hara Sivane Arunachalane