பிரச்சனைகள் தீர பைரவர் மந்திரம் | Pirachanaikal theera bhairavar manthiram in tamil

[ad_1] - Advertisement - ஒவ்வொரு மனிதனும் தன் வாழும் வாழ்நாளில் சந்திக்க கூடிய பிரச்சனைகள் எண்ணில் அடங்காதவை. அதிலும் ஒரு சிலரின் பிரச்சனைகளை கேட்டால் நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது அளவிற்கு இருக்கும். அப்பேர்ப்பட்ட சூழ்நிலையில் அவர்களுடைய மனநிலை பற்றி கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். எப்பேர்பட்ட துயரமானதாக இருக்கும். அந்தப் பிரச்சினைகள் எப்படியானதாக வேண்டுமானாலும் இருக்கலாம். பணம் பிரச்சனை, கடன் ஆரோக்கியக்கேடு, எதிரிகள் தொல்லை, தீய சக்திகளின் தாக்குதல் இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.ஆனால் அனைத்திற்கும் ஆன தீர்வு ஒன்று உண்டெனில் அது இறைவனை முழுவதுமாக சரணடைவது தான். - Advertisement - அப்படி பிரச்சனையில் பாடாய்படக் கூடிய மனிதர்கள் வழிபடக் கூடிய அற்புதமான தெய்வமாக விளங்க கூடியவர் தான் பைரவர். இந்த துன்பத்திலிருந்து எல்லாம் மீண்டு வெளி வர அவரின் ஒரு மந்திரம் போதும் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம். பிரச்சனைகள் தீர பைரவர் மந்திரம் துன்பங்களை தீர்க்கக் கூடியவர் பைரவர் என்று சொல்வதற்கு காரணம் உண்டு. பைரவர் சிவபெருமானின் அம்சமாகவே கருதப்படுகிறார். நம்முடைய கர்ம வினைகளை தீர்க்கக் கூடிய தன்மை கொண்டவர் சிவபெருமான். அவரின் அம்சமான பைரவருக்கும் அத்தகைய தன்மையுண்டு. - Advertisement - ஒரு மனிதன் பாடாய் படக்கூடிய பிரச்சனைகளில் இருக்கிறான் என்றால் கட்டாயம் அவனுடைய ஊழ்வினை ஒரு காரணமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதிலிருந்து மீட்கக் கூடியவர் தான் இந்த பைரவர். சரி இப்போது இந்த பைரவரை மந்திரத்தை எப்போது எப்படி சொல்ல வேண்டும் என்று பார்க்கலாம். இந்த மந்திரத்தை நாளைய தினம் நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் சொல்லலாம். பைரவ வழிபாட்டிற்குரிய காலம் மாலை அல்லது ராகு கால நேரம். இந்த இரண்டில் எந்த நேரம் உங்களுக்கு உகந்ததாக இருக்கிறதோ அந்த நேரத்தில் சொல்லுங்கள். இதை பைரவர் ஆலயத்திற்கு சென்று அவர் முன் அமர்ந்து சொல்லும் போது அதிக பலனை பெறலாம். ஆலயம் செல்ல வாய்ப்பு இல்லாதவர்கள் வீட்டிலும் செய்யலாம். - Advertisement - இந்த மந்திரத்தை சொல்லும் வேளையில் பூஜை அறையில் அமர்ந்து கொள்ளுங்கள். ஒரு விளக்கை ஏற்றி வைத்து விட்டு அதை பைரவராகவே பாவித்து கொள்ளுங்கள். ஏனெனில் பெரும்பாலும் பைரவர் படம் வீட்டில் வைத்திருப்பதில்லை. இந்த தீபத்தின் முன்பு நீங்கள் வடக்கு நோக்கி அமர்ந்து கொள்ளுங்கள். தீபம் கிழக்கு நோக்கி இப்போது கீழ்வரும் இந்த மந்திரத்தை சொல்லுங்கள். பைரவர் காயத்ரி மந்திரம் ஓம் சூல ஹஸ்தாய வித்மஹேஸ்வாந வாஹாய தீமஹிதந்நோ பைரவ: ப்ரசோதயாத் இந்த மந்திரத்தை 18 முறை சொன்னால் போதும். அதன் பிறகு உங்களுடைய பிரச்சனைகள் எதுவும் அது தீர வேண்டும் என்று பைரவரை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். இந்த ஒரு மந்திரத்திற்கே பைரவர் உங்களுடைய பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து அருள் புரிவார் என்று சொல்லப்படுகிறது. இதையும் படிக்கலாமே: வேண்டுதல் நிறைவேற எளிமையான வழிபாடு எந்த ஒரு கஷ்டமான சூழ்நிலைகளில் நம்முடைய நம்பிக்கையும் விடா முயற்சியும் கை விடாது இருக்க வேண்டும். அதே சமயத்தில் இது போன்ற வழிபாடுகள் நம்முடைய பிரச்சனைகள் தீர மிகவும் உதவியாக இருக்கும். இந்த மந்திர வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை செய்து நல்ல பலனை பெறலாம். - Advertisement - [ad_2] https://nithyasubam.in/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0-%e0%ae%aa%e0%af%88%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae/?feed_id=86&_unique_id=6639e7c3aec98

Comments

Popular posts from this blog

ஹர ஹர சிவனே அருணாசலனே: Hara Hara Sivane Arunachalane

வேல் விருத்தம் - Vel Virutham Lyrics in Tamil

Avanithanile Piranthu Lyrics in Tamil