பிரச்சனைகள் தீர மந்திரம் | Pirachanaikal theera manthiram in tamil

[ad_1] - Advertisement - எல்லோருடைய வாழ்க்கையும் எப்பொழுதும் ஒரே சீராக சென்று கொண்டிருக்கும் என்று சொல்ல முடியாது. நன்றாக தான் போய்க் கொண்டிருக்கும் திடீரென எதிர்பாராத வகையில் ஏதோ ஒரு பிரச்சனை நம்மை ஆட்கொள்ளும். அது பண பிரச்சனை அல்லது மனிதர்களால் ஏற்படக் கூடிய பிரச்சனை தொழில் முடக்கம் இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இது போன்ற பிரச்சனைகள் நம்மை சூழ்ந்து இருக்கும் நேரத்தில் நிச்சயம் அதிலிருந்து வெளிவருவதற்கான வழியை தேடி அலைவோம். அந்த சமயத்தில் இந்த மந்திரம் பெரிதும் உதவி புரியும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன மந்திரம் எப்படி சொல்ல வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். - Advertisement - பிரச்சனைகளை எதிர்கொள்ள மந்திரம் பிரச்சனைகள் நம்மை ஆட்களும் போது நாம் உடனே சரண் அடைவது தெய்வத்திடம் தான். ஏனெனில் வெளியில் யாரிடமும் சொல்ல முடியாத பிரச்சனைகளை கூட தெய்வத்திடம் மனதார சொல்லி வேண்டலாம். ஆகையால் துன்பம் வரும் நேரத்தில் நமக்கு முதலில் தோன்றுவது இறைவன் தான். அந்த இறைவனை வழிபட பல வழிபாட்டு ஸ்தலங்கள் வழிபாட்டு முறைகள் பூஜைகள் பரிகாரங்கள் இருந்தாலும் கூட, அவர்களுக்கான மந்திர வழிபாடு அதிக பலனை தரக்கூடியதாக உள்ளது. ஆகையால் தான் நம்முடைய வழிபாட்டு முறைகளில் மந்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு வழிப்பாட்டின் போதும் ஆலயத்தில் மந்திரங்கள் சொல்லப்படுகிறது. - Advertisement - அது போல தான் இந்த ஒரு மந்திரமும். நாம் பிரச்சனையில் துவண்டு போயிருக்கும் போது இந்த மந்திரத்தை சொன்னால் அதிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்பு உடனே கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த மந்திரத்தை பிரம்ம முகூர்த்த நேரத்தில் சொல்லுங்கள். பூஜையறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு குறைந்தது 11 முறை வீட்டில் இருந்து 1008 முறை வரை இதில் உங்களால் எத்தனை முறை சொல்ல முடியுமோ அத்தனை முறை சொல்லுங்கள். ஓம் ஹ்லீம் சர்வகார்ய சித்திம் ஹ்லீம் ஓம் ஃபட். இந்த மந்திரத்தை சொல்லும் வேளையில் குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நமக்கு எந்த ஒரு துன்பம் ஏறும் பொழுதும் குலதெய்வம் தான் முதலில் வந்து காக்கும் என்று சொல்லப்படுகிறது குலதெய்வம் தெரியாதவர்கள் இஷ்ட தெய்வத்தை நினைத்துக் கொள்ளுங்கள். இதையும் படிக்கலாமே: கடன் அடைய சொல்ல வேண்டிய மந்திரம் இந்த ஒரு மந்திரம் உங்களின் அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் உங்களை விடுவிக்க கூடிய ஆற்றலை தரும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த மந்திர வழிபாட்டை செய்து பலன் அடையுங்கள். - Advertisement - [ad_2] https://nithyasubam.in/?p=1778

Comments

Popular posts from this blog

ஹர ஹர சிவனே அருணாசலனே: Hara Hara Sivane Arunachalane

வேல் விருத்தம் - Vel Virutham Lyrics in Tamil

Avanithanile Piranthu Lyrics in Tamil