செல்வம் சேர குபேர மந்திரம் | Selvam peruga kubera manthiram in Tamil

[ad_1] - Advertisement - இன்றைய அதிமுக்கிய தேவை எது என்றால் அது பணம் தான். இந்த வார்த்தையை கேட்கும் போது பணத்தைத் தவிர வேறு எதுவும் தேவை இல்லையா? என்று கேட்கத் தான் தோன்றும். ஆனால் பணம் இல்லாது போனால் எதுவும் இல்லை என்ற நிதர்சனத்தையும் நாம் புரிந்து கொள்ள தான் வேண்டும். நாம் இந்த மண்ணில் பிறந்த நாளிலிருந்து இறக்கும் நாள் வரை நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு இடத்திலும் இந்த பணம் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக தான் இருக்கிறது. தொட்டில் தொடங்கி சுடுகாடு வரை என்ற இந்த பழமொழி பணத்திற்கும் மிகவும் பொருந்தும். - Advertisement - இத்தகைய பணத்தைப் பெற வழிபட வேண்டிய தெய்வங்களில் குபேரர் மிகவும் முக்கியமானவர். ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் பணத்தை தரக்கூடிய குபேரரை நினைத்து சொல்லக் கூடிய ஒரு மந்திரத்தை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். பண வரவு அதிகரிக்க குபேர மந்திரம் முதலில் பணவரவு அதிகரிக்க வேண்டும் எனில் நாம் மகாலட்சுமி தாயாரை பூஜை செய்ய வேண்டும். தாயாரை வெள்ளிக்கிழமை தோறும் வணங்கி அவருடைய அருள் ஆசியை பெறுவது மிகவும் அவசியம். அதே போல தாயாரின் அனுகிரகத்தைப் பெற்ற குபேரரை வணங்குவதும் மிகவும் முக்கியமான ஒன்று. குபேரர் வழிபாட்டிற்கு உகந்த நாளெனில் அது வியாழக்கிழமை தான். - Advertisement - வியாழக்கிழமை மாலை 5:30 மணிக்கு மேல் 8 மணிக்குள்ளாக குபேரர் வழிபாடு செய்வது சிறந்தது. உங்கள் வீட்டில் குபேரர் படம் இருந்தால் மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து வாசனை மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். குபேரர் படம் இல்லை என்றால் மகாலட்சுமி தாயாரின் படத்தை வைத்து குபேரரை நினைத்து வணங்கலாம். அப்படி வணங்கும் போது குபேரருக்கு ஏதேனும் ஒரு எளிய நெய்வேத்தியத்தை கட்டாயமாக வைக்க வேண்டும். அடுத்து குபேரர் படத்திற்கு முன்பாக இரண்டு குபேர தீபம் விளக்கு ஏற்ற வேண்டும். அதற்கு விளக்கில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு ஏற்றுங்கள். இந்த தீபமானது கிழக்கு நோக்கி எறிய வேண்டும். அதே போல் நீங்கள் மந்திரம் சொல்லும் போது வடக்கு நோக்கி அமர்ந்து மந்திரத்தை சொல்லுங்கள். இது நல்ல பலனை தரும். - Advertisement - மந்திரம்ஸ்ரீ தன அகர்சனஸ்ரீ லஷ்மி சகிதம்ஸ்ரீ குபேராய நமஹஇந்த மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். அதன் பிறகு குபேரருடைய நாம அர்ச்சனை உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால் அதையும் சொல்லுங்கள். ஏனெனில் இந்த வழிபாடானது பணவரவை அதிகரிக்க செய்வதாகும். ஆகையால் நீங்கள் எந்த அளவிற்கு அவரை மனம் குளிர வழிபாடு செய்கிறீர்களோ அந்த அளவிற்கு பணம் உங்களை விரைவில் வந்து சேரும். இதையும் படிக்கலாமே: வழக்குகளில் வெற்றி பெற முருகர் வழிபாடு இந்த முறையில் குபேரரை வழிபட்டு குபேரருடைய நல்ல ஆசையுடன் செல்வ செழிப்பான ஒரு யோக வாழ்க்கையை பெறலாம். இந்த வழிப்பாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த மந்திர வழிபாட்டை செய்து நல்ல பலனை பெறுங்கள். - Advertisement - [ad_2] https://nithyasubam.in/?p=2237

Comments

Popular posts from this blog

ஹர ஹர சிவனே அருணாசலனே: Hara Hara Sivane Arunachalane

வேல் விருத்தம் - Vel Virutham Lyrics in Tamil

Avanithanile Piranthu Lyrics in Tamil