சொந்த வீடு கட்ட மந்திரம் | Sontha veedu katta manthiram inTamil

[ad_1] - Advertisement - சொந்த வீடு என்பது பலருடைய கனவு. சொந்த வீடு வேண்டாம் என நினைக்கும் யாரையாவது நாம் இது வரை பார்த்திருக்கிறோமா அல்லது எனக்கு சொந்தமாக வீடு வேண்டாம் என்று சொல்லும் வார்த்தையாவது கேட்டிருக்கிறோமா? என்றால் நிச்சயமாக இல்லை என்றே சொல்லலாம். ஏனெனில் சொந்த வீடு என்பது ஒவ்வொருவருக்கும் தேவையான ஒன்று. காக்கை குருவிகளே தனக்கென சொந்தமாக கூடு கட்டி வாழும் போது மனிதர்களாகிய நமக்கு சொந்த வீட்டில் வாழக் கூடிய ஆசை இல்லை என்று நிச்சயமாக சொல்ல முடியாது. ஆனால் ஆசை மட்டும் இருந்து ஒரு பலனும் கிடையாது. அதற்கான யோகம் வர வேண்டும் யோகம் வர வேண்டுமெனில் அதற்கான பொருளாதார நிலை உயர வேண்டும். - Advertisement - இவை அனைத்தையும் ஒரு சேர பெறக் கூடிய ஒரு எளிய மந்திர வழிபாட்டு முறையை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலம் வாங்கி விட்டு அதில் வீடு கட்ட முடியாமல் திணறுபவர்களும் இந்த மந்திர வழிபாட்டை செய்யலாம். இன்னும் சிலர் சொந்தமாக வீட்டை வாங்கி கட்டி இருப்பார்கள். ஆனால் அவர்களால் அந்த வீட்டில் வாழ முடியாத படி ஏதேனும் ஒரு பிரச்சனை எழுந்த வண்ணம் இருக்கும். அப்படியானவர்களும் இந்த மந்திர வழிபாட்டை செய்யலாம். - Advertisement - வீடு நிலம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடியவர் அங்கார காரகன் அவரை நினைத்து தான் இப்போது இந்த மந்திர வழிபாட்டை செய்யப் போகிறோம். அங்கார காரனுக்கு உகந்த நாள் எனில் அது செவ்வாய்க்கிழமை. ஆகையால் செவ்வாய்க்கிழமை அன்று இந்த மந்திர வழிபாட்டை துவங்குவது சிறந்தது. இதற்கு செவ்வாய்க்கிழமை காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றுவது. அதன் பிறகு புதிதாக ஒரு நோட்டு பேனா எடுத்துக் கொண்டு பூஜை அறையில் நீங்களும் அமருங்கள். இப்போது இந்த மந்திரத்தை நீங்கள் ரோட்டில் எழுத வேண்டும் ஓம் அங்காரகாய நமஹ என்ற இந்த மந்திரத்தை 9 முறை நோட்டில் எழுதுங்கள். - Advertisement - இந்த ஒன்பது என்பது அங்கார காரனுக்குரிய எண் தான். அதன் பிறகு இந்த நோட்டை பூஜை அறையில் வைத்து விடுங்கள். இது போல தினமும் எழுத வேண்டும். இந்த நோட்டு தீர்ந்த பிறகு வேறு நோட்டு வாங்கி எழுதுங்கள். அதிகபட்சம் முதலாவதாக வாங்கி எழுதக் கூடிய நோட்டு முடியும் முன்பே அதற்கான யோகம் வந்து விடும் என்று சொல்லப்படுகிறது. ஒரு சிலரின் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன் கிடைக்கும் நேரம் சற்று தாமதம் ஆகலாம். அப்படி இல்லை என்றால் முதலாவது நோட்டு முடிந்த உடன் அருகில் உள்ள விநாயகர் ஆலயத்தின் உண்டியலில் சேர்த்து விடுங்கள். அப்படி போடக் கூடிய வசதி இல்லை எனில் இந்த நோட்டை அப்படியே வைத்து விட்டு நீங்கள் புதிதாக வீடு கட்டும் போது அந்த நிலத்தில் அடியில் இதை புதைத்து விடுங்கள். இந்த பரிகாரம் மிக மிக சக்தி வாய்ந்த பரிகாரமாக சொல்லப்படுகிறது. இதையும் படிக்கலாமே: வராத பணத்தை வர வைக்க பரிகாரம் ஒருவர் வீடு வாசல் என சௌகரியமாக வாழ வேண்டுமெனில் அதற்கு அங்காரகாரர்கன் அருள் தேவை. இந்த வழிபாடு அவரின் அருளை உங்களுக்கு முழுமையாக பெற்று தரும் என்று சொல்லப்படுகிறது. இந்த பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை செய்து பலன் அடையலாம். - Advertisement - [ad_2] https://nithyasubam.in/?p=1691

Comments

Popular posts from this blog

லலிதா நவரத்தின மாலை: Lalitha Navarathna Malai Lyrics

Garuda Dandakam Lyrics in Tamil

Avanithanile Piranthu Lyrics in Tamil