வேண்டுதல் நிறைவேற மந்திர வழிபாடு | Venduthal niraivera manthira valipadu

[ad_1] - Advertisement - வேண்டுதல் நிறைவேற பல பரிகாரங்கள் இருக்கின்றன. அதே சமயம் பல வழிபாடுகளும் இருக்கின்றன. என்னதான் நாம் பரிகாரம் செய்தாலும் வழிபாடுகளை மேற்கொண்டாலும் அந்த வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்றால் அதற்குரிய முயற்சிகளை நாம் எடுக்க வேண்டும். அந்த முயற்சிகளை முழுமனதோடு நாம் எடுக்கும் பொழுது கண்டிப்பான முறையில் வேண்டுதல் நிறைவேறும். அப்படியும் வேண்டுதல் நிறைவேறாத சூழ்நிலையில் இருப்பவர்கள் இந்த மந்திரத்தை சிவன் கோவிலில் கூறி வர அவர்களுடைய வேண்டுதல் சிவபெருமானிடமே சென்று விரைவிலேயே நடந்து விடும். அப்படிப்பட்ட மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். ஒவ்வொரு தெய்வத்திற்கும் பிடித்தமான செயல்கள், பிடித்தமான பொருட்கள் என்று பல இருக்கின்றன. ஒரு தெய்வத்தின் அருளை நாம் பரிபூரணமாக பெற வேண்டும் என்றால் அந்த தெய்வத்திற்கு பிடித்தமான பொருட்களையும் செயல்களையும் நாம் மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான இந்த இடத்தில் அமர்ந்து கொண்டு நாம் மந்திரத்தை கூற அது சிவபெருமானிடமே கூறுவதற்கு சமமாக இருக்கும். - Advertisement - இந்த வழிபாட்டை திங்கட்கிழமையிலோ அல்லது பிரதோஷ நாட்களிலோ செய்யலாம். அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது அந்த சிவாலயத்தின் தலவிருட்சம் எது என்பதை அறிந்து கொண்டு செல்ல வேண்டும். நாம் வழிபட வேண்டிய தல விருட்சமானது வன்னி மரம். வன்னி மரத்தை தல விருச்சமாகக் கொண்ட சிவன் கோவிலுக்கு செல்ல வேண்டும். எப்பொழுதும் போல் நந்தி பகவானை வழிபட்டு விட்டு நந்தி பகவானுக்கு அருகம்புல்லை வைத்து வழிபட்டுவிட்டு சிவபெருமானுக்கு வில்வ இலைகளை கொடுத்து அவரிடமும் மனதார வேண்டிக் கொண்டு அம்பாள் சன்னதிக்கு வரவேண்டும். அம்பாளுக்கு தாமரை பூக்களை வாங்கி கொடுத்துவிட்டு அம்பாளையும் வழிபட வேண்டும். பிறகு ஆலயத்தை வலம் வருவோம் அல்லவா? அப்பொழுது தல விருச்சமான வன்னி மரத்தை பார்ப்போம். - Advertisement - இந்த வன்னி மரத்திடம் சென்று முதலில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து வன்னி மரத்திடம் உங்களை வழிபட எனக்கு அனுமதி வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். பிறகு உங்களுடைய நெற்றி வன்னி மரத்தில் படும்படி வைத்துக் கொண்டு “ஓம் பிறங் பிறங் குசாய சிங் சிவாய நம” - Advertisement - என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். இவ்வாறு 108 முறை உச்சரிக்கும் பொழுதும் நம்முடைய நெற்றி வன்னி மரத்தின் மீது படும் படி இருக்க வேண்டும். அவ்வாறு செய்ய இயலாதவர்கள், வயதானவர்கள் என்னும் சூழ்நிலையில் அவர்கள் 27 முறை கூறினால் போதும். இந்த மந்திரத்தை கூறிய பிறகு நம்முடைய வேண்டுதல் என்னவோ அந்த வேண்டுதலை வன்னி மரத்திடம் வைத்து கற்பூரத்தை ஏற்றி வழிபட்டு விட்டு திரும்ப வேண்டும். இந்த முறையில் நாம் வன்னி மரத்திடம் மந்திரத்தை கூறி நம்முடைய வேண்டுதலை வைத்தோம் என்றால் அது நேரடியாக சிவபெருமானிடமே வைத்ததற்கு சமமாக கருதப்படுகிறது. இதையும் படிக்கலாமே: செல்வம் சேர குபேர மந்திரம் இந்த மந்திரத்தை நம்பிக்கையுடன் வன்னி மரத்திடம் கூறி எண்ணிய அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்வோம். - Advertisement - [ad_2] https://nithyasubam.in/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%87%e0%ae%b1-%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/?feed_id=118&_unique_id=663ddcf94926e

Comments

Popular posts from this blog

லலிதா நவரத்தின மாலை: Lalitha Navarathna Malai Lyrics

Garuda Dandakam Lyrics in Tamil

Avanithanile Piranthu Lyrics in Tamil