வியாபாரம் சிறப்பாக நடக்க மந்திரம் | Viyabaram sirappaga nadakka manthiram

[ad_1] - Advertisement - சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்காக தங்கள் கையில் இருக்கும் பணத்தை வைத்து சொந்தமாக வியாபாரம் ஏதாவது செய்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று பலரும் வியாபாரம் செய்ய ஆரம்பிக்கிறார்கள். ஒரு சிலர் தங்கள் கையில் இருக்கும் சேமிப்பு பணத்தை இதில் செலவிடுகிறார்கள். இன்னும் சிலரோ வெளியில் இருந்து கடன் வாங்கி வியாபாரத்தை செய்ய ஆரம்பிக்கிறார்கள். எப்படி முதலீடு செய்தாலும் அந்த வியாபாரம் வெற்றிகரமாக நடைபெற்றால் தான் போட்ட முதலீடை திரும்ப எடுக்க முடியும். அப்படி வெற்றிகரமான வியாபாரத்தை மேற்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் எந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்று தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். பொதுவாக ஒரு வழிபாட்டை நாம் மேற்கொள்ளும் பொழுது அந்த தெய்வத்திற்குரிய மந்திரத்தை உச்சரித்தோம் என்றால் அதற்குரிய பலனே தனிதான். ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான மந்திரங்கள் இருக்கின்றது. அதோடு மட்டுமல்லாமல் இந்த தெய்வத்திற்கு இந்த செயலுக்காக வழிபாடு செய்கிறோம் என்றால் அதற்கென்று தனியாக மந்திரங்கள் இருக்கிறது. அப்படி பார்க்கும் பொழுது ஒவ்வொரு தெய்வத்திற்கும் பலவிதமான மந்திரங்களை நம்மால் கூற முடியும். - Advertisement - ஒரு வியாபாரத்தை செய்கிறோம் என்றால் அந்த வியாபாரத்தில் எந்தவித நஷ்டமும் ஏற்படக்கூடாது, லாபகரமாக நடைபெற வேண்டும். அப்படி லாபகரமாக நடைபெற வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்கள் வியாபாரத்தில் விற்பனை என்பது அதிகரிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். விற்பனை அதிகரிக்க வேண்டும் என்றால் அவர்கள் கடையை தேடி வாடிக்கையாளர்கள் வரவேண்டும். அப்படியே வாடிக்கையாளர்கள் வந்தாலும் அவர்கள் பொருட்களை மன மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்ல வேண்டும். இப்படி பல நிபந்தனைகள் இருக்கின்றன. இவை அனைத்தையும் கடந்து வெற்றிகரமான அதேசமயம் லாபகரமான தொழிலை மேற்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் அதற்குரிய முழு உழைப்பையும் முயற்சியையும் வியாபாரத்தில் செய்ய வேண்டும். கடுமையான உழைப்பிற்கு ஏற்ற பலனை கிடைக்கும் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். உழைக்காமல் எந்தவித பலனும் கிடைக்காது. இந்த மந்திரத்தை கூறினால் நாம் எந்தவித உழைப்பும் செய்யாமல் அதிக அளவில் லாபத்தை சம்பாதித்து விட முடியும் என்று நினைத்தால் அது ஒரு முட்டாள்தனமான செயல் ஆகும். கடினமான உழைப்பை நாம் செய்து கொண்டே மந்திர வழிபாட்டையும் மேற்கொண்டோம் என்றால் அதன் பலனை நம்மால் பல மடங்கு அனுபவிக்க முடியும். - Advertisement - அனுதினமும் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு வியாபாரம் செய்ய கிளம்புவதற்கு முன்பாக வீட்டு பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து இந்த மந்திரத்தை மனதார உச்சரிக்க வேண்டும். இந்த மந்திரத்தை முதலில் உச்சரிக்கும் நாளானது அமாவாசை, பௌர்ணமி நாளாக இருக்க வேண்டும். அன்றைய தினம் சுத்தமாக குளித்து முடித்துவிட்டு அருகில் இருக்கக்கூடிய கோசாலைக்கு சென்று 1008 முறை இந்த மந்திரத்தை உச்சரித்து உருவேற்றிக் கொள்ள வேண்டும். இந்த மந்திரத்தை உச்சரிப்பதற்கு முன்பாக குருதட்சணையாக தங்களால் இயன்ற தொகையை தனியாக எடுத்து விநாயகருக்கு முன்பாக வைத்து விட்டு இந்த மந்திரத்தை உருவேற்ற வேண்டும். ஒருமுறை மட்டும் 1008 முறை உருவேற்றி விட்டு அதற்குப் பிறகு வரும் நாட்களில் தினமும் 16 முறை மட்டும் இந்த மந்திரத்தை உச்சரிக்க வியாபாரம் செழிக்க மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். - Advertisement - மந்திரம் ஓம் ஸ்ரீம் க்லீம் தனம் வரஷ்ய வஷ்ய நமஹ இதையும் படிக்கலாமே :காரிய வெற்றி ஏற்பட ஹனுமன் மந்திரம் வியாபாரத்தை லாபகரமாக நடத்துவதற்கு கடுமையாக உழைப்பதோடு இந்த மந்திரத்தையும் மனதார உச்சரிக்க கண்டிப்பான முறையில் வியாபாரம் வெற்றிகரமாக நடைபெறும். - Advertisement - [ad_2] https://nithyasubam.in/?p=1834

Comments

Popular posts from this blog

லலிதா நவரத்தின மாலை: Lalitha Navarathna Malai Lyrics

Garuda Dandakam Lyrics in Tamil

Avanithanile Piranthu Lyrics in Tamil