சகல விதமான பிரச்சனைகளும் தீர கருட மந்திரம்

[ad_1] - Advertisement - மனிதனை பாடாய்படுத்தும் பிரச்சனைகள் என்றால் அதை ஒரு பெரிய பட்டியலே போடலாம். பணப்பிரச்சனை, குடும்ப பிரச்சனை, வீட்டு பிரச்சனை, சொத்து பிரச்சனை, சகோதரர்கள் கிடையே மன வருத்தம், கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் வருத்தம், பிள்ளைகளுக்கு இடையே உள்ள பிரச்சனை, வேலை செய்யும் இடம் என இப்படி பிரச்சனைகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். பிரச்சனைகளே இவ்வளவு என்றால் இத்தனை பிரச்சனைகளும் உடனே தீர வேண்டும் என்றால் அது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம் தானே. ஆனால் நாம் ஒரு சில மந்திரங்களையும் வழிபாடுகளையும் செய்யும் பொழுது அத்தனை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் ஒரு மந்திர வழிபாட்டை பற்றி தான் மந்திரம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். - Advertisement - பிரச்சனைகள் தீர கருடாழ்வார் மந்திரம் கருடாழ்வார் என்பவர் பெருமாளின் வாகனமாகவும் பெருமாளின் கொடியாகவும் வணங்கப்படுகிறார். பெருமாள் கருடனை வெற்றிக்கான அறிகுறியாக நியமித்து ‘நீ என் கொடியிலும் விளங்குவாய், என்று வரம் அளித்ததாக சொல்லப்படுகிறது. இந்த கருடாழ்வாழரை நாம் தொடர்ந்து வழிபட்டால் நம்முடைய பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்துவிடும். எத்தனை பெரிய பாரமாக இருந்தாலும் கருடாழ்வார் தன்னுடைய கால்களால் தூக்கி பறப்பார். அதே போல மனிதன் எத்தனை பெரிய துன்பத்தில இருந்தாலும் அதிலிருந்து தூக்கி காப்பாற்றக் கூடிய வல்லமை கொண்டவர் தான் இந்த கருடாழ்வார் என்றால் அது மிகை ஆகாது. அப்படியான கருடாழ்வாரை ஒரு நாளைக்கு மூன்று முறை மனதார நினைத்து அவருடைய மந்திரத்தை சொல்ல வேண்டும். அப்படி சொல்லும் போது நம்முடைய அனைத்து பிரச்சனைகளும் தீர்வு அதற்கான வல்லமையும் வாய்ப்பு உண்டாகும். இதோ அந்த மந்திரம். - Advertisement - கருட சலோகம் ஓம் ஸ்ரீ காருண்யாய,கருடாய, வேத ரூபாய,வினதா புத்ராய,விஷ்ணு பக்தி பிரியாய,அம்ருத கலச ஹஸ்தாய,பஹ பராக்ரமயா,பக்ஷி ராஜாய சர்வ வக்ர,சர்வ தோஷ, சர்வ விஷ சகல சாபவீநாசநாய ஸ்வாஹா…… இந்த மந்திரத்தை பெண்கள் மாதவிலக்கான நேரத்திலும் வீட்டில் வேறு வகையான தீட்டுக்கள் இருந்தாலும் சொல்லக் கூடாது. வேறு எந்த கட்டுப்பாடும் இந்த வழிபாட்டிற்கு கிடையாது. நீங்கள் அசைவம் சாப்பிடுவதாக இருந்தால் மந்திரத்தை சொன்ன பிறகு சாப்பிடுங்கள். அசைவம் சாப்பிட்ட பிறகு மந்திரத்தை சொல்லாதீர்கள். - Advertisement - அதே போல் இந்த மந்திரத்தை வீட்டில் அலுவலகத்தில் எங்கு அமர்ந்து வேண்டுமானாலும் சொல்லலாம். இந்த மந்திரத்தை சொல்லும் போது நீங்கள் கிழக்கு திசையை நோக்கி இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் வாகனத்தில் பயணம் செய்யும் போது சொல்லாதீர்கள் மந்திரம் பலனை தராது. இதையும் படிக்கலாமே: மீளா துன்பத்திலிருந்து மீள மந்திரம் இந்த மந்திர வழிபாட்டை தவறாது கடைப்பிடிப்பவர்கள் வாழ்வில் துன்பம் என்ற வார்த்தையோ தோல்வி என்று எண்ணமும் அறவே வராமல் நீங்கி விடும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த மந்திர வழிபாட்டை செய்து பலன் அடையுங்கள். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/?p=2873

Comments

Popular posts from this blog

ஹர ஹர சிவனே அருணாசலனே: Hara Hara Sivane Arunachalane

வேல் விருத்தம் - Vel Virutham Lyrics in Tamil

Avanithanile Piranthu Lyrics in Tamil