பஞ்சமுக ஆஞ்சநேயர் மந்திரம் | Panja muga anjaneyar manthiram

[ad_1] - Advertisement - ஒவ்வொரு தெய்வமும் ஒவ்வொரு விதமாக அனுக்கிரகம் செய்வார்கள். நமக்கு என்ன வேண்டுதல் வேண்டுமோ அதை எந்த தெய்வத்திடம் வேண்டினால் நமக்கு உடனடி பலன் கிடைக்குமோ அதை அந்த தெய்வத்திடம் வேண்டும்பொழுது அதற்குரிய பலன் நமக்கு விரைவிலேயே கிடைக்கும். ஆனால் ஒரே தெய்வத்திடம் ஐந்து குணங்கள் இருக்கும் பட்சத்தில் அந்த ஒரு தெய்வத்தை நாம் வணங்கும் பொழுது ஐந்து தெய்வங்களையும் வணங்குவதற்குரிய பலனை நம்மால் பெற முடியும். அந்த வகையில் தான் இன்று பஞ்சமுக ஆஞ்சநேயரை எந்த மந்திரத்தை கூறி வழிபட நன்மைகள் கிடைக்கும் என்று இந்த மந்திரம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம். ஒரு தெய்வத்தை நாம் சாதாரணமாக வணங்குவதற்கும் மந்திரங்களை கூறி வணங்குவதற்கும் வித்யாசங்கள் இருக்கிறது. மந்திரத்தை நாம் சரியாக உச்சரித்து வழிபட்டோம் என்றால் அந்த மந்திரத்திற்கு உரிய பலனை நம்மால் விரைவிலேயே பெற முடியும். அதன் அடிப்படையில் இந்த பதிவில் பஞ்சமுக ஆஞ்சநேயரின் மந்திரத்தை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். - Advertisement - ஆஞ்சநேயரை வழிபடுவது என்பது மிகவும் சிறப்பு. அதிலும் பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபடும் பொழுது ஐந்து விதமான தெய்வங்களை வணங்குவதற்குரிய பலனை நம்மால் பெற முடியும். ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன்களையும் நம்மால் உணர முடியும். ஐந்து திசைகளை பார்த்தவாறு இருக்கக்கூடிய பஞ்சமுக ஆஞ்சநேயரை பற்றி முதலில் தெரிந்து கொள்வோம். கிழக்கு முகமாக இருக்கக்கூடிய முகத்தை ஆஞ்சநேயர் என்று கூறுவோம். இவரை நாம் வழிபடுவதன் மூலம் பகைவர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கும். தெற்கு முகமாக இருக்கக்கூடிய முகத்திற்கு நரசிம்மர் முகம் என்று பெயர். இந்த நரசிம்மரை நாம் வழிபடுவதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய எப்பேர்ப்பட்ட தோஷமாக இருந்தாலும் அந்த தோஷம் நிவர்த்தியாகும். - Advertisement - மேற்கு முகமாக பார்த்திருக்கக் கூடிய முகத்தை கருட முகம் என்று கூறுவோம். இவரை நாம் வழிபடுவதன் மூலம் நம்முடைய உடலில் இருக்கக்கூடிய உபாதைகள் அனைத்தும் நீங்கி ஆரோக்கியமாக வாழ முடியும். வடக்கு பார்த்தவாறு இருக்கக்கூடிய முகத்திற்கு வராகர் முகம் என்று பெயர். இவரை நாம் வழிபடுவதன் மூலம் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய ஏழ்மை நிலை அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பு உயரும். ஐந்தாவதாக இருப்பது தான் மேல் நோக்கி இருக்கும் முகம் இவருக்கு ஹயக்ரீவர் என்று பெயர். இவரை நாம் வழிபடுவதன் மூலம் நம்முடைய வாக்கு பலித்தமாகும். கல்விகளில் சிறந்து விளங்க முடியும். சரி இப்பொழுது இவர்கள் அனைவரையும் வழிபடுவதற்குரிய மந்திரத்தை பற்றி தெரிந்து கொள்வோம் - Advertisement - ஆஞ்சநேயர்ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய பூர்வ கபி முகே சகல சத்ரு ஸம்ஹாரணாய ஸ்வாகா! நரசிம்மர்ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய தக்ஷிண முகே கரால வதனாய ந்ருசிம்மாய சகல பூத ப்ரேத ப்ரமதனாய ஸ்வாகா! கருடர்ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய பச்சிம முகே கருடாய சகல விஷ ஹரணாய ஸ்வாகா! வராகர்ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய உத்தர முகே ஆதிவராஹாய சகல சம்பத்கராய ஸ்வாகா! ஹயக்ரீவர்ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய ஊர்த்வ முகே ஹயக்ரீவாய சகல ஜன வசீகரணாய ஸ்வாஹா! இந்த ஐந்து மந்திரங்களையும் தினமும் எட்டு முறை உச்சரிக்க வேண்டும். இந்த மந்திரங்களை உச்சரிப்பதற்கு முன்பாக 18 அல்லது 28 முறை ராம நாமத்தை உச்சரித்த பிறகு உச்சரிக்கும் பொழுது விரைவிலேயே ஆஞ்சநேயரின் அருளால் மேற்சொன்ன பலன்கள் நம்மை வந்தடையும். இதையம் படிக்கலாமே: நோய் தீர மந்திரம் தினமும் காலையில் பூஜையறையில் ராம நாமத்தை உச்சரித்துவிட்டு இந்த பஞ்சமுக ஆஞ்சநேயரின் மந்திரத்தை உச்சரிப்பவர்களுடைய வாழ்க்கையில் இருக்க கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் நீங்கி உடல் ஆரோக்கியத்துடனும் செல்வ செழிப்புடனும் நலமுடன் வாழ முடியும். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/?p=2906

Comments

Popular posts from this blog

ஹர ஹர சிவனே அருணாசலனே: Hara Hara Sivane Arunachalane

வேல் விருத்தம் - Vel Virutham Lyrics in Tamil

Avanithanile Piranthu Lyrics in Tamil