செல்வம் பெருக ஏகாதேசி மந்திரம் | Selvam peruga yegathasi manthiram

[ad_1] - Advertisement - மாதத்தில் 30 நாட்களும் திதிகள் வரும். இந்த திதிகளை நாம் வளர்பிறை திதிகளாகவும், தேய்பிறை திதிகளாகவும் பிரித்து கூறுவோம். பௌர்ணமியில் இருந்து அமாவாசை வரும் வரை இருக்கக்கூடிய திதிகளை தேய்பிறை திதிகளாகவும் அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரை வரக்கூடிய திதிகளை வளர்பிறை திதிகளாகவும் நாம் கூறுவோம். ஒவ்வொரு திதிகளுக்கும் ஒவ்வொரு தெய்வம் சிறப்பு மிகுந்த தெய்வங்களாக திகழ்கின்றன. அந்த வகையில் ஏகாதேசி திதி என்பது பெருமாளுக்கு உரிய திதியாக திகழ்கிறது. இந்த ஏகாதேசி திதி அன்று பெருமாளை நினைத்து எந்த மந்திரத்தை நாம் கூறினால் செல்வ செழிப்பு உயரும் என்றுதான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - படைத்தல். காத்தல். அளித்தல் போன்ற தொழிலை செய்யக்கூடிய முப்பெரும் தேவர்களில் காத்தல் தொழிலை செய்யக் கூடியவர் தான் பெருமாள். நம்முடைய வாழ்நாளில் எந்த அளவிற்கு நாம் பெருமாளை வணங்குகிறோமோ அந்த அளவிற்கு நம்முடைய வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த பெருமாளை நாம் மாதத்தில் இரண்டு முறை வரக்கூடிய ஏகாதேசி திதி அன்று மறவாமல் வணங்க வேண்டும். இயன்றவர்கள் தினமும் வணங்கலாம் அல்லது வாரத்தில் புதன்கிழமையும், சனிக்கிழமையும் வணங்கலாம். மேலும் “ஓம் நமோ நாராயணா” என்னும் மந்திரத்தை மனதார உச்சரிப்பவர்களுக்கு கூட பெருமாள் அனுகிரகம் காட்டி அவர்களின் வேண்டுதலை நிறைவேற்றி தருவார். அப்படிப்பட்ட பெருமாளை ஏகாதேசி திதி அன்று இந்த மந்திரத்தை கூறி வழிபட்டால் நம்முடைய கர்ம வினைகள் அனைத்தும் நீங்கும். அதோடு செல்வ செழிக்கும் உயரும். - Advertisement - ஏகாதேசி திதி என்று காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் பெருமாளின் படத்திற்கு முன்பாக நெய் தீபத்தை ஏற்றி வைத்து அவருக்கு துளசி இலைகளால் மாலை தொடுத்து போடவேண்டும். பிறகு அவருக்கு முன்பாக அமர்ந்து இந்த மந்திரத்தை கூற வேண்டும். இயன்றவர்கள் அன்றைய தினம் கோவிலுக்கு சென்று தாமரை பூவையும் துளசி மாலையும் வாங்கி சாற்றி வழிபட்டு விட்டு வரலாம். உடல்நிலை ஆரோக்கியமாக இருப்பவர்கள் அன்றைய தினம் விரதம் இருக்கலாம். விரதம் இருக்க இயலாதவர்கள் கூட இந்த எளிமையான மந்திரத்தை மட்டும் படித்து பெருமாளை வணங்கினாலே போதும். - Advertisement - மந்திரம் அரியே அரியே அனைத்தும் அரியே!அறியேன் அறியே அரிதிருமாலைஅறிதல் வேண்டி அடியேன் சரணம்திருமால் நெறிவாழி!திருத்தொண்டர் செயல்வாழி! இந்த மந்திரத்தை கூறி முடித்த பிறகு பெருமாளின் போற்றிகளையும் நாம் கூறலாம். இயன்றவர்கள் பெருமாளின் போற்றிகளை கூறும் பொழுது துளசி இலைகளால் பெருமாளுக்கு அர்ச்சனை செய்வது மிகவும் சிறப்பு. இப்படி நாம் பெருமாளை நினைத்து ஏகாதிசி திதி அன்று இந்த மந்திரத்தை கூறி வழிபட நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கி இன்பமான வாழ்க்கையை பெற முடியும். இதையும் படிக்கலாமே: சகல நன்மைகள் தரும் ஒருவரி மந்திரம் இந்த மந்திர வழிபாட்டில் முழு நம்பிக்கை இருப்பவர்கள் பெருமாளை நினைத்து நாளைய தினம் வரக்கூடிய ஏகாதேசி திதியில் இந்த மந்திரத்தை கூறி முழு பலனையும் பெறலாம். - Advertisement - [ad_2] https://nithyasubam.in/?p=2767

Comments

Popular posts from this blog

ஹர ஹர சிவனே அருணாசலனே: Hara Hara Sivane Arunachalane

வேல் விருத்தம் - Vel Virutham Lyrics in Tamil

Avanithanile Piranthu Lyrics in Tamil