வறுமை நிலை நீங்கி செல்வம் உயர கூற வேண்டிய மந்திரம்

[ad_1] - Advertisement - வறுமை என்ற ஒன்று நம்முடைய வாழ்க்கையில் வந்து விட்டால் நம்மிடம் இருந்து பல விஷயங்கள் காணாமல் போய்விடும். சந்தோஷம், நிம்மதி, மகிழ்ச்சி, மரியாதை என்று கூறிக் கொண்டே செல்லலாம். இந்த வறுமை நிலை வந்து விட்டால் நம்முடன் சேர்ந்து வரக்கூடியது கஷ்டம், கடன், வருத்தம், துன்பம் போன்றவை. இவை அனைத்தும் வந்துவிட்டால் நம்முடைய வாழ்க்கை எப்படி சந்தோஷமாக இருக்கும். அதனால் முடிந்த அளவிற்கு வறுமை நிலை வராத அளவிற்கு பார்த்துக் கொள்ள வேண்டும். பண வரவை அதிகரிக்கவும் வறுமை நிலையை மாறவும் சொல்லக்கூடிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம். வறுமை நிலை நீங்கி செல்வம் உயர மந்திரத்திற்கு பல சக்திகள் இருக்கிறது. எந்த மொழியில் மந்திரத்தை கூறினாலும் முழுமனதோடு கூற வேண்டும். எந்த நேரத்தில் கூறுகிறோம் என்பதும் முக்கியமே. எந்த தெய்வத்தை பற்றின மந்திரத்தை கூறுகிறோம் என்பதும் குறிப்பிடத்தக்கது. எந்த தெய்வத்தையும் நினைக்காமல் “ஓம்” எனும் பிரணவ மந்திரத்தை முழுமனதோடு உச்சரித்தாலும் அதற்குரிய பலனை நம்மால் பெற முடியும். - Advertisement - அப்படி இருக்கும் பொழுது நம்முடைய வறுமை நிலைக்கு காரணமாக இருக்கக்கூடிய கிரகத்துக்குரிய மந்திரத்தை நாம் உச்சரித்தோம் என்றால் அந்த கிரகம் மனம் மகிழ்ந்து நம்முடைய வறுமை நிலையை நீக்கிவிடும் அல்லவா? அப்படிப்பட்ட ஒரு கிரகம் தான் செவ்வாய் கிரகம். இவர் நன்மை செய்பவராக இருந்தால் பல மடங்கு நன்மை செய்வார். இவரால் பாதிப்புகளும் உண்டாகும். கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் இவரை காரணமாக திகிழ்கிறார். சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்றாலோ அல்லது இருக்கும் இடத்தை விற்க வேண்டும் என்றாலோ இவர் தான் முக்கிய காரணமாக திகழக்கூடியவர். அப்படிப்பட்ட செவ்வாய் பகவானை பெரும்பாலும் சொந்த வீடு கட்ட வேண்டும், கடன் தீர வேண்டும் என்பதற்காக மட்டுமே தான் வழிபாடு செய்வோம். அதிலும் குறிப்பாக செவ்வாய் பகவானுக்குரிய அதிதேவதியான முருகப்பெருமானை சென்று வழிபாடு செய்வோம். அதிதேவதைகளை வழிபடுவது எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு அந்த கிரகங்களையும் நாம் வழிப்பட வேண்டும். - Advertisement - அதனால் தான் இந்த பதிவில் செவ்வாய் பகவானுக்குரிய மந்திரத்தை பற்றி நாம் கூறுகிறோம். இந்த மந்திரத்தை ஒரு முறை தினமும் கூற வேண்டும். இன்று ஒரு நாள் மட்டும் வறுமை இல்லாமல் இருந்தால் போதுமா? வாழ்நாள் முழுவதும் வறுமை இல்லாமல் இருக்க வேண்டும் அல்லவா? அதனால் வாழ்நாள் முழுவதும் இந்த மந்திரத்தை ஒருமுறை மட்டும் கூறினால் போதும். இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் இந்த மந்திரத்தை நடந்து கொண்டோ, வெளியில் வண்டி வாகனங்களில் சென்று கொண்டு உச்சரிக்கக் கூடாது. வீட்டில் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து உச்சரிக்க வேண்டும். அது பூஜை அறையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இயன்றவர்கள் கோவிலில் கூட சென்று உச்சரிக்கலாம். இந்த மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது நாம் சுத்தமாக இருக்க வேண்டும். அதாவது அசைவம் சாப்பிட்டு இருக்க கூடாது. ஆண்கள் மது அருந்தி இருக்கக் கூடாது. பெண்கள் தீட்டு காலத்தில் இந்த மந்திரத்தை உச்சரிக்கக் கூடாது போன்ற நிபந்தனைகள் இருக்கிறது. - Advertisement - மந்திரம் ஓம் அவந்தி தேசாதிபனே போற்றி!ஓம் பாரத்வாஜ வம்சவா போற்றி!ஓம் முருகனின் உருவே போற்றி!ஓம் மேஷ ராசிப் பிரியனே போற்றி!ஓம் விருச்சிகத்தில் இருப்பாய் போற்றி! ஓம் தென் முகத்தவனே போற்றி!ஓம் தேவியின் பிரியனே போற்றி!ஓம் பூமியின் புதல்வனே போற்றி!ஓம் சகோதர காரகனே போற்றி!ஓம் குஜனே போற்றி! ஓம் ரணகாரனே போற்றி!ஓம் ருணரோக நிவாரணனே போற்றி!ஓம் கடன் தீர்ப்பாய் போற்றி!ஓம் மகீ சுதனே போற்றி!ஓம் நவநாயக உருவே போற்றி இதையும் படிக்கலாமே : வாழ்வில் சிறக்க வெள்ளிக்கிழமை வழிபாடு இந்த செவ்வாய் பகவானின் போற்றிகளை தினமும் ஒரு முறை முழு மனதோடு உச்சரித்து வருபவர்களுக்கு எப்பேர்ப்பட்ட வறுமை நிலையாக இருந்தாலும் அது படிப்படியாக நீங்கி செல்வ செழிப்பு உயரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/slogam/%e0%ae%b5%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae/

Comments

Popular posts from this blog

லலிதா நவரத்தின மாலை: Lalitha Navarathna Malai Lyrics

Garuda Dandakam Lyrics in Tamil

Avanithanile Piranthu Lyrics in Tamil