எதிரிகளை தும்சம் செய்யும் காளி மந்திரம்

[ad_1] - Advertisement - அம்மனின் மறு அவதாரமாக திகழக் கூடியவர் தான் மகாகாளி. காளியம்மனை வழிபடுவதற்கு பலரும் அஞ்சுவார்கள். ஏனென்றால் அவள் மிகவும் ஆக்ரோஷமானவள் என்று. அதற்காக பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. நம்முடைய தாய் நாம் ஏதாவது ஒரு தவறு செய்தால் நம்மை தண்டிப்பாள் அல்லவா? அதே போல் தான் மகாகாளியும் நாம் தவறுகள் செய்தால் நம்மை தண்டிப்பார். தண்டிப்பதற்கு முன்பாக ஒரு சில எச்சரிக்கைகளை தரும் பொழுது அதை அறிந்து சுதாரித்துக் கொண்டு நல்லவழிக்கு சென்று விட்டோம் என்றால் நமக்கு தண்டனைகள் ஏற்படாது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் மேலும் மேலும் தவறுகளை செய்யும் பொழுது தான் தாயானவள் நமக்கு தண்டனையை தருவாள். அதனால் மகா காளியை வழிபடுவதில் எந்தவித தயக்கமும் காட்டாமல் மனதார அந்த அம்மனை நாம் வழிபடுவோம். அப்படிப்பட்ட அம்மனை நாம் வழிபடும் பொழுது நமக்கு பல நன்மைகள் ஏற்படும். முக்கியமாக தீய சக்திகள் மற்றும் எதிரிகளின் தாக்கத்திலிருந்து நம்மால் விடுபட முடியும். அந்த வகையில் எந்த மந்திரத்தை தினமும் கூறி மகாகாளியை வழிபட்டால் எதிரிகளின் தொல்லை நீங்கும் என்று தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - அரக்கர்களை அழிப்பதற்காக அவதாரம் எடுத்தவள் தான் மகாகாளி என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது. அப்படி ஒருவர் தவறு செய்யும் பொழுது அந்த தவறை உணர்ந்து திருத்திக்கொள்ளாமல் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு கண்டிப்பான முறையில் தண்டனை என்பது கிடைக்கத்தான் செய்யும். மேலும் தன்னை சரணாகதி அடைந்தவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளையும் நீக்கக்கூடிய தெய்வமாக தான் காளியம்மன் திகழ்கிறார். முக்கியமாக காளியம்மனை வழிபாடு செய்பவர்களுக்கு தீய சக்திகளால் எந்த வித பாதிப்பும் ஏற்படாது. அதோடு மட்டுமல்லாமல் அவர்களை எதிர்த்து நிற்க யாராலையும் முடியாது. அவர்களுக்கு எதிரிகள் என்று யாருமே இருக்க முடியாது என்றுதான் கூற வேண்டும். மேலும் காளியம்மனை நாம் வழிபடுவதன் மூலம் நம்முடைய பாவங்களும், துன்பங்களும் நீங்கும் என்று கூறப்படுகிறது. - Advertisement - அதோடு மட்டுமல்லாமல் மன தைரியம் என்பது அதிக அளவில் கிடைக்கும். இன்றைய காலத்தில் பெண் பிள்ளைகள் படிப்பதற்காகவோ, வேலை நிமித்தமாகவோ தனியாக தங்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் தினமும் மகாகாளியின் இந்த மந்திரத்தை கூறும் பொழுது அவர்களுக்கு மன தைரியம் என்பது ஏற்படுவதோடு அவர்களுக்கு பாதிப்புகளும், துன்பங்களும் வராமல் மகாகாளி ஆனவள் காப்பாற்றுவாள். இதே போல் சிறுவயதிலேயே மகாகாளியின் மந்திரங்களை குழந்தைகளை பாராயணம் செய்ய வைக்க வேண்டும். அப்படி செய்வதன் மூலம் அவர்களுக்கு இருக்கக்கூடிய பய உணர்வு முற்றிலும் நீங்கி தைரியம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. - Advertisement - மந்திரம் ஓம் காளீ காளீ மகாகாளீ காளிகே பாப ஹாரிணி!ஸர்வ துக்க ஹரே தேவி மாஹாகாளீ நமோஸ்துதே!! இந்த மந்திரத்தை தினமும் பாராயணம் செய்யலாம். தினமும் பாராயணம் செய்ய இயலாதவர்கள் அஷ்டமி, அமாவாசை போன்ற தினங்களில் பாராயணம் செய்வது சிறப்பு. இந்த மந்திரத்தை நாம் பூஜையறையில் அமர்ந்து தான் பாராயணம் செய்ய வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் கிடையாது. எந்த இடத்தில் வேண்டுமானாலும் இருந்து கொண்டு இந்த மந்திரத்தை பாராயணம் செய்யலாம். வீட்டில் சமைத்துக் கொண்டிருக்கும் பொழுது அல்லது அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது நமக்கு எப்பொழுதெல்லாம் பய உணர்வு ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் மகாகாளியை மனதார நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை கூறும் பொழுது மகாகாளி ஆனவள் நம்முடனே வந்து இருந்து நமக்கு தைரியத்தை தந்து நமக்கு வரக்கூடிய கஷ்டங்களிலிருந்து நம்மை காப்பாற்றுவாள். இதையும் படிக்கலாமே பஞ்சமுக ஆஞ்சநேயர் மந்திரம் மிகவும் எளிமையான இந்த மந்திர வழிபாட்டில் முழு நம்பிக்கை இருப்பவர்கள் இந்த மந்திரத்தை கூறி மகாகாளியின் பாதுகாப்பில் நலமுடன் வாழ முடியும். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/?p=https://nithyasubam.in/tamil/slogam/%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%af%81%e0%ae%ae/

Comments

Popular posts from this blog

ஹர ஹர சிவனே அருணாசலனே: Hara Hara Sivane Arunachalane

வேல் விருத்தம் - Vel Virutham Lyrics in Tamil

Avanithanile Piranthu Lyrics in Tamil