கஷ்டங்கள் நீங்க முருகன் மந்திரம் | kastangal neega murugan manthiram in tamil

[ad_1] - Advertisement - ஒருவருடைய வாழ்க்கையில் பல கஷ்டங்கள் ஏற்படும். அந்த கஷ்டங்களை சமாளித்து வெளியில் வருவது தான் வாழ்க்கை என்று கூட கூறலாம். அப்படிப்பட்ட கஷ்டங்களிலிருந்து வெளியே வருவதற்கு முயற்சிகளை செய்தும் வெளியில் வர முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்கள் முருகப்பெருமானின் அருளை பெற வேண்டும். முருகப்பெருமானின் அருளை பெற்று யார் ஒருவர் தன்னுடைய கஷ்டங்களிலிருந்து விடுபட முயற்சி செய்கிறார்களோ அவர்களுக்கு அந்த கஷ்டங்கள் நிவர்த்தி ஆகும் என்று கூறப்படுகிறது. அப்படி கஷ்டங்கள் நிவர்த்தி ஆவதற்கு முருகப்பெருமானின் மந்திரத்தை எந்த முறையில் உச்சரிக்க வேண்டும் என்று தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். முருகன் மந்திரம் தேவர்களின் கஷ்டங்களை போக்குவதற்காக அவதரித்தவர் தான் முருகப்பெருமான். அப்படிப்பட்ட முருகப்பெருமானை நாம் வழிபடும் பொழுது நம்முடைய கஷ்டங்களும் நீங்கும் என்றுதான் கூற வேண்டும். அவரை முழுமனதோடு சரணாகதி அடைந்து அவரின் மந்திரங்களை உச்சரித்தாலேயே நம்முடைய கஷ்டங்களை தீர்ப்பதற்கு வேலும் மயிலும் ஓடோடி வந்துவிடும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட முருகப் பெருமானின் மந்திரத்தை எந்த முறையில் உச்சரிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வோம். - Advertisement - இந்த மந்திரத்தை அனுதினமும் உச்சரிக்கலாம். அப்படி இல்லாத பட்சத்தில் முருகப்பெருமானுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் போன்ற நாட்களில் உச்சரிப்பது என்பது மிகவும் சிறப்பு. செவ்வாய்க்கிழமை அன்று மாலை நேரத்தில் வீட்டில் முருகப் பெருமானின் சிலை இருக்கும் பட்சத்தில் பசும்பாலால் அபிஷேகம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். படமாக இருக்கும் பட்சத்தில் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அவருக்கு ஆறு செவ்வாழைப்பழங்களை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். செவ்வரளி பூக்களை மாலையாக சூட்டி அணிவிக்க வேண்டும். இவ்வாறு அணிவித்துவிட்டு முருகப்பெருமானுக்கு ஆறு நெய் தீபங்களை ஏற்றி வைத்துவிட்டு - Advertisement - “உருவாய் அருவாய் உளதாய் இளதாய்மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்கருவாய் உயிராய் கதியாய் விதியாய்குருவாய் வருவாய் அருள்வாய் குகனே” என்னும் இந்த மந்திரத்தை ஆறு முறை உச்சரிக்க வேண்டும். இப்படி தொடர்ச்சியாக செவ்வாய்க்கிழமை மற்றும் கிருத்திகை நட்சத்திரம் வரும் நாட்களில் முருகப்பெருமானின் இந்த மந்திரத்தை கூறுவதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலகும். - Advertisement - தொழிலில் இருக்கக்கூடிய நஷ்டங்கள் நீங்கி லாபம் அதிகரிக்கும். திருமண தடை விலகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தை பாடாய்ப் படுத்திக் கொண்டிருக்கும் கஷ்டங்கள் கூட நிவர்த்தியாகும். முன்னேற்றமே இல்லை என்று வருத்தப்படுபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். இந்த மந்திரத்தை கூறி முடித்த பிறகு அன்றைய தினம் தங்களால் இயன்ற அளவிற்கு ஒருவருக்காவது அன்னதானம் செய்வது என்பது மிகவும் சிறப்பு. இதையும் படிக்கலாமே:சுக்கிர யோகம் பெற அமாவாசையில் ஏற்ற வேண்டிய தீபம் நம்முடைய கர்ம வினைகளை நீக்கி வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தையும் நிவர்த்தி செய்து நன்மைகளை தரும் இந்த முருகனின் மந்திரத்தை மனதார உச்சரித்து நல்ல பலனை பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/slogam/%e0%ae%95%e0%ae%b7%e0%af%8d%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d/

Comments

Popular posts from this blog

லலிதா நவரத்தின மாலை: Lalitha Navarathna Malai Lyrics

Garuda Dandakam Lyrics in Tamil

Avanithanile Piranthu Lyrics in Tamil