வாழ்க்கையில் முன்னேற்றம் பெற மந்திரம் | valkayil munnetram pera manthiram

[ad_1] - Advertisement - சாதாரணமாக தெய்வத்தை வழிபடுவோம். அப்படி வழிபடுவது விட நமக்கு தெரிந்த ஏதாவது ஒரு மந்திரத்தை கூறிக்கொண்டு வழிபட்டோம் என்றால் அதனுடைய பலனை இன்னும் அதிகமாக இருக்கும். திருநீரை மந்திரத்தை கூறி பூசினால் அந்த திருநீரும் நமக்கு மருந்தாக மாறும் என்றுதான் மந்திரமாவது நீறு என்று கூறியிருக்கிறார்கள். சாதாரணமாக ஒரு தெய்வத்தின் பெயரை நாம் மனதார உச்சரித்தால் கூட அது மந்திரமாக மாறி நம்மை பாதுகாக்கும் கவசமாக மாறிவிடும். அப்படி எந்த மந்திரத்தை எந்த ராசிக்காரர்கள் உச்சரித்தால் அவர்களின் வாழ்க்கை நன்றாக அமையும் என்று தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். வாழ்க்கையில் முன்னேற்றம் பெற மந்திரம் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமான தெய்வங்கள் அதிபதியாக திகழ்வார்கள். அதேபோல் ஒவ்வொரு லக்னத்திற்கும் ஒவ்வொரு விதமான தெய்வங்கள் அதிபதியாக திகழ்வார்கள். எந்த ராசியாக இருந்தாலும் நட்சத்திரமாக இருந்தாலும் அவர்களுக்குரிய தெய்வம் எந்த தெய்வம் என்பதை அறிந்து அதற்கேற்றார் போல் வழிபாடு செய்தால் அதன் சிறப்பு இன்னும் அதிகமாக இருக்கும். - Advertisement - இந்த மந்திரத்தை சொல்வதற்கு நமக்கு பெரிய வழிமுறைகள் எதுவும் தேவையில்லை. தினமும் காலையில் வீட்டில் விளக்கேற்றி சாமி கும்பிடுவோம் அல்லவா? அவ்வாறு சாமி கும்பிடும் பொழுது மனதார இந்த மந்திரத்தை மூன்று முறை மட்டும் கூறினால் போதும். வேறு எதுவும் சொல்லத் தேவையில்லை. இந்த மந்திரத்தை நாம் உச்சரிக்கும் பொழுது ஏதாவது ஒரு நெய்வேத்தியத்தை சுவாமிக்கு முன்பாக வைத்துவிட்டு உச்சரிப்பது என்பது சிறப்பு. இப்பொழுது ஒவ்வொரு லக்னக்காரர்களும் எந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வோம். மேஷ லக்னக்காரர்கள் “ஓம் நமசிவாய” என்னும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். ரிஷப லக்னக்காரர்கள் “ஓம் நமோ நாராயணா” என்னும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மிதுன லக்னக்காரர்கள் “ஓம் கம் கணபதியே நமஹ” என்னும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். - Advertisement - கடக லக்னக்காரர்கள் “ஓம் சிவாய நம” என்னும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். சிம்ம லக்னக்காரர்கள் “ஓம் பைரவராய நம” என்னும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். கன்னி லக்னக்காரர்கள் “ஓம் சரவணபவ” என்னும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். துலாம் லக்னக்காரர்கள் “ஓம் பராசக்தியே நமக” இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். விருச்சிக லக்கின காரர்கள் “ஓம் முருகா” என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். தனுசு லக்னக்காரர்கள் “ஸ்ரீராமஜெயம்” என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மகர லக்னக்காரர்கள் “ஓம் பிரத்தியங்கரா தேவியே நமஹ” என்னும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். கும்ப லக்னக்காரர்கள் “ஓம் மகா புருசாய நமஹ” என்னும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மீன லக்னக்காரர்கள் “ஓம் பகவதியே நமக” என்னும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். - Advertisement - முழுமனதுடன் அனைத்து தெய்வங்களுக்கு முன்பாக இந்த மந்திரங்களை மூன்று முறை உச்சரித்து வழிபடுபவர்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி நல்ல முன்னேற்றகரமான வாழ்க்கை அமையும். இதையும் படிக்கலாமே: வளர்பிறை அஷ்டமி வாராஹி வழிபாடு மிகவும் எளிமையான இந்த மந்திரத்தை படிக்க தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று யார் வேண்டுமானாலும் உச்சரிக்கலாம். முழு மனதுடன் உச்சரிக்க வேண்டும் என்பது மட்டுமே குறிப்பிடத்தக்கது. தேவைக்கேற்றார் போல் மந்திரங்களை உச்சரித்துவிட்டு அப்படியே விடக்கூடாது என்பதாலும் தொடர்ந்து ஒரு மந்திரத்தை உச்சரிக்கும் போது நம்முடைய வாழ்க்கையில் நன்மைகள் உண்டாகிறது என்பதையும் கண்கூடாக தெரிந்து கொள்ளலாம். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/slogam/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae/

Comments

Popular posts from this blog

லலிதா நவரத்தின மாலை: Lalitha Navarathna Malai Lyrics

Garuda Dandakam Lyrics in Tamil

Avanithanile Piranthu Lyrics in Tamil