காரிய சித்தி தரும் சித்தர் மந்திரம்

[ad_1] - Advertisement - இந்த உலகத்தில் வாழ்ந்து ஜீவசமாதி அடைந்து இன்றளவும் உயிருடன் சூட்சும ரூபத்தில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்களை தான் நாம் சித்தர்கள் என்று கூறுகிறோம். சித்தர்கள் பலர் இருந்தாலும் 18 சித்தர்கள் மிகவும் பிரசித்தி பெற்ற சித்தர்களாக திகழ்கின்றன. அப்படிப்பட்ட சித்தர்கள் அருளிய ஒரு மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். யார் ஒருவர் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அந்த காரியத்தில் வெற்றி கிடைக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். அப்படி காரியத்தில் வெற்றி பெறவும், இது நாள் வரை வாழ்க்கையில் எந்தவித நன்மையும் பெற முடியவில்லை என்பவர்களும் நம் தலையெழுத்தே இப்படித்தான் என்று நினைத்துக் கொண்டு இருப்பவர்களும் இந்த மந்திரத்தை கூறும் பொழுது அவர்களுக்கு காரிய வெற்றி உண்டாகும். தலையெழுத்து மாறுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டு ஆகும் என்று கூறப்படுகிறது. - Advertisement - இந்த மந்திரத்தை பிரம்ம முகூர்த்த நேரமான காலை 4:00 மணியிலிருந்து 6:00 மணிக்குள் சொல்ல வேண்டும். அப்படி அந்த நேரத்தில் சொல்ல இயலவில்லை என்பவர்கள் 8:00 மணியில் இருந்து 10:00 மணிக்குள் அல்லது மாலை நேரத்தில் விளக்கேற்றி வைத்து விட்டோ இந்த மந்திரத்தை கூறலாம். இந்த மந்திரத்தை தொடர்ச்சியாக 48 நாட்கள் கணக்கு வைத்து தினமும் 108 முறை உச்சரிக்க வேண்டும். வீட்டு பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு அந்த தீபத்தை பார்த்தவாறு இந்த மந்திரத்தை கூற வேண்டும். இது ஒரு பிசாசர மந்திரம் என்பதால் இதனால் நமக்கு பல நன்மைகள் உண்டாகும் என்றும் முழு மனதோடு கூறும் பொழுது அதற்குரிய ஆற்றலை நம்மால் உணர முடியும் என்றும் கூறப்படுகிறது. - Advertisement - நேர்மறை ஆற்றலை தன்னுள்ளே உணர்ந்தவர்கள் தங்களுக்கு இருக்கக்கூடிய தடைகளை விரைவிலேயே விளக்கி விடுவார்கள் என்றும் அவர்கள் மேற்கொள்ளக்கூடிய காரியத்தில் வெற்றியும் அடைவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த 48 நாட்கள் மந்திர வழிபாட்டை மேற்கொள்ளும் பொழுது அசைவம் சாப்பிடுவதையும் முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். மேலும் அந்த 48 நாட்களும் விரதம் இருப்பது என்பது சிறப்புக்குரியதாக திகழ்கிறது. எந்த சித்தரை உங்களுக்கு பிடிக்குமோ அந்த சித்தரை நீங்கள் மனதார நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை கூறலாம். அப்படி இல்லை என்றால் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு சித்தர்கள் இருக்கிறார்கள். உங்களுடைய நட்சத்திரத்திற்கு எந்த சித்தர் உகந்த சித்தர் என்பதை அறிந்தும் அந்த சித்தரை நினைத்து இந்த மந்திரத்தை கூறலாம். மேலும் இந்த மந்திரத்தை முதல் நாள் எந்த நேரத்தில் நாம் கூறுகிறோமோ அதே நேரத்தில் தான் தொடர்ந்து 48 நாட்களும் கூற வேண்டும். - Advertisement - மந்திரம் ஓம் சிங் ரங் அங் சிங் இதையும் படிக்கலாமே கடன் தீர்க்கும் ஒரு வரி மந்திரம் மிகவும் எளிமையான இந்த மந்திரத்தை முழுமனதோடு சித்தர்களை நினைத்துக் கொண்டு கூறுபவர்களுக்கு நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும், காரிய வெற்றி உண்டாகும், நல்ல முன்னேற்றகரமான வாழ்க்கை அமையும். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/slogam/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/

Comments

Popular posts from this blog

லலிதா நவரத்தின மாலை: Lalitha Navarathna Malai Lyrics

Avanithanile Piranthu Lyrics in Tamil

ஹர ஹர சிவனே அருணாசலனே: Hara Hara Sivane Arunachalane