நினைத்ததெல்லாம் நடக்க வாராகி அம்மன் மந்திரம்

[ad_1] - Advertisement - இன்றைய காலகட்டத்தில் அனைத்து விதமான மக்களும் வணங்கக்கூடிய தெய்வமாக திகழக்கூடியவர் தான் வாராகி அம்மன். உக்கிர தெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் திகழ்பவராக இருந்தாலும் தன்னை நம்பி தன்னை வழிபடுபவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்களை நீக்கி நன்மைகளை தரக்கூடிய அற்புதமான தாயாக திகழ்கிறார். அப்படிப்பட்ட வாராகி அம்மனின் பூரண ஆசியை பெறவும் நினைத்ததெல்லாம் நடக்கவும் வாராகி அம்மனுக்குரிய எந்த மந்திரத்தை கூற வேண்டும் என்றுதான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். நாம் வணங்குகின்ற ஒவ்வொரு தெய்வத்திற்கும் பல மந்திரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மந்திரத்தை நாம் கூறும்பொழுதும் அந்த மந்திரத்தால் நமக்கு நன்மைகள் ஏற்படும். நம்முடைய பிரச்சினைகள் தீர்வதற்கு எந்த மந்திரத்தை கூற வேண்டும் என்பதை உணர்ந்து தினமும் மனதார அந்த தெய்வத்தை நினைத்து கூறினோம் என்றால் கண்டிப்பான முறையில் நம்முடைய வாழ்க்கையில் நல்ல மாற்றம் என்பது ஏற்படும். அந்த வகையில் வாராகி அம்மனின் மந்திரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம். - Advertisement - வாராகி அம்மனுக்கு என்று மூலமந்திரம் காயத்ரி மந்திரம் என்று பல மந்திரங்கள் இருக்கின்றன. எதிரிகள் தொல்லை நீங்க, தொழிலில் சிறந்து விளங்க, தடைப்பட்ட காரியங்கள் நடக்க என்று பலவிதமான பிரச்சனைகள் தீர்வதற்கு பல மந்திரங்கள் இருக்கின்றன. அதே போல் தான் நாம் நினைத்தது நடப்பதற்கு கூற வேண்டிய மந்திரமும் இருக்கிறது. இந்த மந்திரத்தை நாம் கூறும்பொழுது நமக்கு லட்சுமி கடாட்சம் ஏற்படும், எதிரிகள் தொல்லை நீங்கும், நினைத்ததெல்லாம் நடக்கும், காரிய வெற்றி உண்டாகும் என்று கூறப்படுகிறது. இந்த அனைத்து விதமான பலன்களும் கிடைப்பதற்கு இந்த பலன்களுக்குரிய பீஜ மந்திரத்தை வாராகி அம்மனின் பெயரோடு சேர்த்து நாம் கூறும்பொழுது வாராகி அம்மனின் அருளால் இவை அனைத்தும் நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. - Advertisement - மந்திரம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் சௌம் க்லீம் வாராகியே நமஹ இதில் ஓம் என்பது பிரணவ மந்திரமாக கருதப்படுகிறது. ஸ்ரீம் என்னும் பீஜ மந்திரம் எதிரிகள் தொல்லை நீங்க உதவும். சௌம் என்னும் பீஜ மந்திரம் நினைத்த காரியம் அனைத்தையும் நடத்திக் கொடுக்கும். க்லீம் என்னும் பீஜ மந்திரம் வெற்றிக்கு மேல் வெற்றி கிடைக்க துணை புரியும். - Advertisement - இந்த மந்திரத்தை தினமும் காலையில் வீட்டில் வாராகி அம்மனுக்கு என்று ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு தங்களால் இயன்ற அளவு கூறுவதன் மூலம் வாராஹி அம்மனின் அருள் கிடைக்கும். மேலும் நமக்கு எப்பொழுதெல்லாம் தோன்றுகிறதோ அப்பொழுதெல்லாம் நம்முடைய மனதிற்குள் இந்த மந்திரத்தை கூறி வருவதன் மூலமும் பல பலன்கள் கிடைக்கும். மேலும் இந்த மந்திரத்தை ஒரு லட்சத்து எட்டு முறை யார் மனதார வாராஹி அம்மனை நினைத்து கூறுகிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் அனைத்து விதமான நன்மைகளும் நடக்கும் என்று கூறப்படுகிறது. இதையும் படிக்கலாமே தம்பதிகள் ஒற்றுமை அதிகரிக்க சொல்ல வேண்டிய மந்திரம் மிகவும் எளிமையான அதே சமயம் சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை வாராகி அம்மனை முழுமனதோடு நினைத்து கூறுபவர்களுடைய வாழ்க்கையில் நினைத்தது அனைத்தும் நடந்தேறும். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/slogam/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%be/

Comments

Popular posts from this blog

ஹர ஹர சிவனே அருணாசலனே: Hara Hara Sivane Arunachalane

வேல் விருத்தம் - Vel Virutham Lyrics in Tamil

Avanithanile Piranthu Lyrics in Tamil