நோய்கள் நீங்கி ஆரோக்கியம் பெருக மந்திரம்

[ad_1] - Advertisement - நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அது எந்த அளவிற்கு உண்மையான வார்த்தைகள் என்று நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மட்டுமே தான் தெரியும். நோயால் கஷ்டப்படுபவர்களால் எந்தவித சுகத்தையும் அனுபவிக்க முடியாது. எவ்வளவு பணம் இருந்தாலும் நகை இருந்தாலும் சொத்து இருந்தாலும் அவை அனைத்தையும் அனுபவிக்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் நம்முடைய உடல் ஆரோக்கியமாகவும் திடகாத்திரமாகவும் இருக்க வேண்டும். இதோடு மட்டுமல்லாமல் பலரது வாழ்க்கையில் நோயினால் கஷ்டப்படுவதோடு மட்டுமல்லாமல் அந்த நோய்க்காக செலவு செய்யும் தொகையும் அதிகமாக போகும். அப்படிப்பட்ட நோயால் ஏற்படக்கூடிய செலவுகளை குறைக்கவும் நோய் படிப்படியாக குறையவும் சொல்ல வேண்டிய ஆஞ்சநேயர் மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் பெருக மந்திரம் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான சக்திகள் இருக்கிறது. இன்றைய காலத்தில் பலரும் வணங்கக்கூடிய ஆபத் பாண்டவனாக திகழக்கூடியவர் ஆஞ்சநேயர். ஆஞ்சநேயரை ஆபத்து பாண்டவன் என்று கூறுவதோடு மட்டுமல்லாமல் காரிய வெற்றியை தரக்கூடியவராகவும் அவர் திகழ்கிறார். எப்படி விநாயகப் பெருமானை வழிபட்டு விட்டு ஒரு காரியத்தை செய்யும் பொழுது அதில் வெற்றிகள் உண்டாகுமோ அதே போல் ஆஞ்சநேயரை வழிபட்டு விட்டு காரியத்தை செய்ய தொடங்கினாலும் வெற்றிகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது. - Advertisement - மிகவும் வீரமான அதே சமயம் தைரியமான தெய்வமாக திகழக்கூடிய ஆஞ்சநேயரை நாம் வழிபடும் பொழுது அவரைப்போல நமக்கும் உடல் பலம், மன பலம் என்பது அதிகரிக்கும். அப்படிப்பட்ட ஆஞ்சநேயருக்குரிய மந்திரத்தை நாம் ஒரு குறிப்பிட்ட நாளில் உச்சரிக்கும் பொழுது நமக்கும் அதே உடல் பலம் என்பது ஏற்படும். அதனால் ஆரோக்கியமாக வாழ்வோம். இந்த மந்திரத்தை ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய ஏகாதசி திதி அன்று கூறவேண்டும். வளர்பிறை ஏகாதசி, தேய்பிறை ஏகாதசி என்று இரண்டு ஏகாதசிகள் வரும். இரண்டிலும் நாம் இந்த மந்திரத்தை கூற வேண்டும். அந்த நாளில் ராகு காலம், எமகண்டம் தவிர்த்து மீதம் இருக்கும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த மந்திரத்தை கூறலாம். இந்த மந்திரத்தை தரையில் அமர்ந்து கூறக்கூடாது. சிவப்பு நிற துணியை விரித்து அதற்கு மேல் அமர்ந்து தான் கூற வேண்டும். - Advertisement - இவ்வாறு கூறும் பொழுது நாம் கிழக்கு பார்த்தவாறு அமர்ந்திருக்க வேண்டும். மேலும் நம்முடைய இரண்டு கைகளிலும் துளசி இலைகளை வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை கூற வேண்டும். இந்த மந்திரத்தை தொடர்ச்சியாக 11 முறை கூறினால் போதும். 11 முறை கூறிய பிறகு இந்த துளசி இலைகளை நாமும் நம் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் பிரசாதமாக சாப்பிட வேண்டும். மந்திரம் ஓம் ஆஞ்சநேயாய வித்மஹேவாயு புத்ராய தீமஹிதன்னோ ஹனுமதா பிரச்சோதயாத் இதையும் படிக்கலாமே:துன்பங்களை விரட்டியடிக்கும் வாராகி மந்திரம் மிகவும் எளிமையான சக்தி வாய்ந்த ஆஞ்சநேயரின் இந்த மந்திரத்தை முழுமனதோடு யார் ஒருவர் ஏகாதேசி திதி என்று கூறுகிறார்களோ, அவர்களுடைய குடும்பத்தில் இருக்கக்கூடிய நோய்கள் முற்றிலும் நீங்கி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/slogam/%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae/

Comments

Popular posts from this blog

லலிதா நவரத்தின மாலை: Lalitha Navarathna Malai Lyrics

Garuda Dandakam Lyrics in Tamil

Avanithanile Piranthu Lyrics in Tamil