தம்பதிகள் ஒற்றுமை அதிகரிக்க சொல்ல வேண்டிய மந்திரம்

[ad_1] - Advertisement - ஒரு குடும்பம் சிறப்பாக இருக்கிறது என்றால் அதற்கு கணவன் மனைவி என்ற இரண்டு நபர்கள் வேண்டும். அந்த சக்கரங்கள் நன்றாக இருந்தால்தான் குடும்பம் என்னும் வண்டி நன்றாக ஓடும். இதில் ஏதாவது ஒன்றில் கூட பிரச்சினை இருந்தாலும் அந்த வண்டி ஓடுவது மிகவும் சிரமமாகிவிடும். கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அனுசரித்து சென்றால்தான் அந்த குடும்பம் குடும்பமாக இருக்கும். இல்லையேல் அதற்கு அர்த்தமே இல்லாமல் போய் விடும். அப்படி கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்த அனுசரித்து செல்வதற்கு சொல்ல வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். தம்பதிகள் ஒற்றுமை அதிகரிக்க சொல்ல வேண்டிய மந்திரம் கணவன் மனைவி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்கும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் என்பதற்கும் நம்முடைய தெய்வங்களை சான்றாக விளங்குகின்றன. சிவபெருமான் தன்னில் சரிபாதியாக பார்வதிக்கு இடம் கொடுத்தார். அதேபோல் மகாவிஷ்ணுவோ தன் மார்பில் மகாலட்சுமிக்கு இடம் கொடுத்திருக்கிறார். அப்படி கணவனுக்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அந்த கருத்து வேறுபாடுகளை மறந்து ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் என்று தான் நம்முடைய முன்னோர்கள் கூறி இருக்கிறார்கள். - Advertisement - கணவன் மனைவி ஒற்றுமை என்று பார்க்கும் பொழுது அதில் அதிகப்படியான பங்கு பெண்களுக்கே வந்து சேருகிறது. கணவன் என்னதான் பிரச்சனை செய்தாலும் அதை சமாளித்து அவரிடம் விட்டுக் கொடுத்து அனுசரித்து சென்று குடும்பத்தை ஓட்டக்கூடிய முக்கியமான பொறுப்பு பெண்களுக்கு தான் இருக்கிறது. அதனால் பெண்கள் தங்களுடைய சகிப்புத்தன்மை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் பார்வதியின் அருளும் பெற்றால் அவர்களால் நல்ல வாழ்க்கையை வாழ முடியும். அப்படி பார்வதி அம்மனின் அருளைப் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய அம்மனின் படத்திற்கு குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும். இப்படி குங்கும அர்ச்சனை செய்த குங்குமத்தை அவர்களுடைய உச்சந்தலை வகுட்டிலும் தாலியிலும் வைத்துக் கொள்வதன் மூலம் அம்மனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். - Advertisement - இதன் மூலம் அவர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளில் இருந்து சாமர்த்தியமாக வெளிவர முடியும். குங்கும அர்ச்சனை செய்யும்பொழுது இந்த மந்திரத்தை கூறி அர்ச்சனை செய்தால் அதன் பலன் இன்னும் அதிகமாக இருக்கும். ”ஓம் சௌம் பார்வதி தேவி நமஹ”. இதேபோல், கணவன் மனைவி ஒற்றுமைக்கு ஒரு சான்றாக திகழக்கூடியவர்கள் தான் ரதி தேவியும் காம தேவனும். இவர்களின் ஆதிக்கம் எந்த கணவன் மனைவிக்கு இருக்கிறதோ அவர்கள் எந்தவித சண்டை சச்சரவும் இன்றி ஒற்றுமையுடன் வாழ்வார்கள் என்று கூறப்படுகிறது. அதனால் பிரச்சனையில் இருப்பவர்கள் கணவன் மனைவிக்கு இடையே அன்பு இல்லை, பாசம் இல்லை என்று நினைப்பவர்கள் இந்த மந்திரத்தை கூற விரைவிலேயே ஒருவர் மீது ஒருவருக்கு பாசமும் காதலும் ஏற்பட்டு ஒற்றுமையுடன் வாழ்வார்கள். ”ஓம் க்லீம் ஸ்ரீ ரதி தேவி சமேத ஸ்ரீ காமதேவாய நமஹ” என்று மூன்று முறை கூறினால் போதும். இதையும் படிக்கலாமே:ஞானத்தைத் தரும் முருகன் மந்திரம்மிகவும் எளிமையான இந்த இரண்டு மந்திரத்தையும் தினமும் உச்சரிக்கும் பெண்களுக்கு அவர்களுடைய கணவர்கள் என்றும் அன்புடனும் பாசத்துடனும் அக்கறையுடனும் இருப்பார்கள். அவர்களுடைய குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/slogam/%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf/

Comments

Popular posts from this blog

லலிதா நவரத்தின மாலை: Lalitha Navarathna Malai Lyrics

Garuda Dandakam Lyrics in Tamil

Avanithanile Piranthu Lyrics in Tamil