மனபாரத்தை நீக்கும் முருகன் மந்திரம் | Mana parathai neekum murugan manthiram

[ad_1] - Advertisement - இந்த கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக திகழக்கூடியவர் முருகப்பெருமான். அப்படிப்பட்ட முருகப்பெருமானை யார் ஒருவர் முழு மனதோடு நினைத்து வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு முருகப்பெருமானின் அருள் என்பது பரிபூரணமாக கிடைக்கும். நமக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகள் தீர்வதற்காகவும் வேண்டுதல்கள் நிறைவேறுவதற்காகவும் பல வழிகளில் நாம் முருகப் பெருமானை வழிபாடு செய்வது உண்டு. அந்த வகையில் இந்த மந்திரம் குறித்த பதிவில் நம்முடைய மனப்பாரம் நீங்க சொல்ல வேண்டிய முருகனின் மந்திரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம். எந்தவித படிப்பறிவும் இல்லாமல் தெய்வத்தின் பெயரை மட்டும் மனதார ஒரு முறை கூறினாலே அந்த தெய்வத்தின் அருள் என்பது கிடைக்கும் என்று புராணங்களில் பல கதைகள் கூறப்பட்டு இருக்கின்றன. அப்படி இருக்கும் பொழுது தெய்வத்திற்கே உரிய மந்திரங்களை முழு மனதோடு நாம் கூறினோம் என்றால் அதற்குரிய பலன் நமக்கு எந்த அளவுக்கு கிடைக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அதனால்தான் பலரும் மந்திரங்களை உச்சரிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். - Advertisement - மேலும் நாம் மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும். அதனால் நம்மை சுற்றி இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. எந்த ஒரு இடத்தில் தொடர்ச்சியாக மந்திரம் ஒலித்துக் கொண்டே இருக்கிறதோ அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றலுக்கு வேலையே இல்லை என்றும் கூறப்படுகிறது. ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான மந்திரங்களை உச்சாடனம் செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். அதிலும் குறிப்பாக எந்த வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த வேண்டுதலுக்கு ஏற்ற மந்திரத்தை கூற வேண்டும் என்றும் கூறப்படுகிறது. அப்படி பல மந்திரங்கள் நமக்கும் தெரிந்திருக்கும். இந்த கலியுகத்தில் காக்கும் தெய்வமாக திகழக்கூடிய முருகப்பெருமானுக்குரிய மந்திரங்களும் பல இருக்கின்றன. நம்முடைய மனபாரம், மன கவலை தீரவும், சௌபாக்கியம் பெருகவும், செல்வ செழிப்பு மேலோங்கவும் செய்யக்கூடிய ஒரு மந்திர வழிபாட்டை பற்றி தெரிந்து கொள்வோம். - Advertisement - இந்த வழிபாட்டை வெள்ளிக்கிழமை அன்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை செய்வதற்கு முன் வீட்டில் எப்பொழுதும் போல் வெள்ளிக்கிழமை பூஜையை நிறைவு செய்த பிறகு கிழக்கு முகமாக பார்த்த அமர்ந்து கையில் முருகனின் வேல் அல்லது முருகனின் படம் இருந்தால் அதை வைத்துக் கொள்ளலாம். வேல் இல்லாத பட்சத்தில் வேலின் படம் இருந்தாலும் அதை வைத்துக் கொள்ளலாம். இப்படி கையில் வைத்துக் கொள்ளும் அளவிற்கு இல்லை என்று நினைப்பவர்கள் தங்களுடைய மனதில் கையில் வேலை வைத்திருப்பது போல் உருவகப்படுத்திக் கொண்டும் இந்த மந்திரத்தை கூறலாம். தொடர்ச்சியாக 21 அல்லது 27 முறை இந்த மந்திரத்தை கூற வேண்டும். இப்படி இந்த மந்திரத்தை நாம் கூறுவதன் மூலம் நம்முடைய மன கவலைகள், மனபாரங்கள், மன கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். வெளியே யாரிடமும் சொல்ல முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருந்த கஷ்டங்கள் கூட முருகனின் அருளால் காணாமல் போய்விடும். மேலும் நமக்கு செல்வம் பெருக ஆரம்பிக்கும், சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். - Advertisement - மந்திரம் ஓம் முருகா ஓம் ஹ்ரீம் ஓம் இதையும் படிக்கலாமே வெற்றியைத் தரும் முருகன் வழிபாடு எளிதான இந்த மந்திரத்தை சத்தம் கேட்காமல் மனதிற்குள் உச்சரிக்க வேண்டும் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. முருகப் பெருமானை மனதார நினைத்துக் கொண்டு மனதிற்குள் இந்த மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு முருகப்பெருமானின் அருளால் அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கி சகல சௌபாக்கியம் கிடைக்கும். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/slogam/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a8%e0%af%80%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95/

Comments

Popular posts from this blog

ஹர ஹர சிவனே அருணாசலனே: Hara Hara Sivane Arunachalane

வேல் விருத்தம் - Vel Virutham Lyrics in Tamil

Avanithanile Piranthu Lyrics in Tamil