சிவபெருமானின் பரிபூரணமான அருளைப் பெற உதவும் மந்திரம்

[ad_1] - Advertisement - தேய்பிறையில் வரக்கூடிய ஒவ்வொரு திதியும் நம்முடைய கஷ்டங்களை தீர்க்கும் என்றும் வளர்பிறையில் வரக்கூடிய ஒவ்வொரு திதியும் நம்முடைய செல்வ செழிப்பை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக பிரதோஷம் என்பது நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களை தீர்க்கக் கூடியதாக திகழும் ஒரு திதியாகும். அதுவும் வளர்பிறையில் வரக்கூடிய பிரதோஷ தினத்தன்று நாம் சிவபெருமானை வழிபாடு செய்யும்பொழுது வேண்டிய வரம் கிடைக்கும். அப்படிப்பட்ட வளர்பிறை பிரதோஷமானது புதன்கிழமை வருகிறது. இன்றைய நாளில் நாம் எந்த மந்திரத்தை கூறி சிவபெருமானை வழிபட்டால் சிவபெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம். நம்மில் பலரும் பிரதோஷ நாளன்று சிவபெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்வோம். பலரும் மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணிக்குள் வரக்கூடிய பிரதோஷ நேரத்தில் அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று அங்கு சிவபெருமானுக்கு நடக்கக்கூடிய அபிஷேகங்களில் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபாடு செய்வார்கள். இன்னும் சிலரோ வீட்டில் இருக்கக்கூடிய சிவலிங்கத்திற்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபாடு செய்வார்கள். - Advertisement - விரதம் இருப்பவர்கள் ஆக இருந்தாலும் வழிபாடு மட்டும் செய்பவர்களாக இருந்தாலும் அன்றைய தினத்தில் சிவபெருமானை முழுமனதோடு நினைத்து செய்யக்கூடிய எந்த ஒரு செயலும் பல அற்புதமான பலனை தரும் என்று கூறப்படுகிறது. அன்றைய தினத்தில் அருகில் இருக்கக்கூடிய ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்யும்பொழுது சிவபெருமானின் அருளை மட்டும் பெறுவதோடு அனைத்து தெய்வங்கள் மற்றும் தேவர்களின் அருளையும் ஒருசேர பெற முடியும் என்று கூறப்படுகிறது. ஐப்பசி மாதம் என்பது வழிபாட்டிற்குரிய மாதம். ஐப்பசி மாதத்தில் வளர்பிறையில் வரக்கூடிய பிரதோஷமானது நமக்கு அதிக அளவில் நற்பலன்களை தரக்கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. அன்றைய தினத்தில் பிரம்ம முகூர்த்த நேரத்திலோ அல்லது மாலை 6:00 மணிக்கு மேலோ இந்த மந்திரத்தை ஒரு முறை சிவபெருமானை மனதார நினைத்து கூறினால் போதும் சிவபெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். மேலும் இந்த மந்திரத்தை ஒருமுறை முழுமனதோடு நிறுத்தி நிதானமாக கூறிவிட்டு நாம் என்ன வேண்டுதலை வைத்தாலும் அந்த வேண்டுதல் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. - Advertisement - இதற்கு நாம் பிரம்ம முகூர்த்த நேரத்திலோ அல்லது மாலை 6 மணிக்கு மேலோ வீட்டில் இருக்கக்கூடிய சிவபெருமானின் படத்திற்கு முன்பாகவோ அல்லது சிலைக்கு முன்பாகவோ அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் கிழக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். பிறர் சிவபெருமானுக்கு நம்மால் இயன்ற ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைத்துவிட்டு இந்த மந்திரத்தை கூற வேண்டும். இயன்றவர்கள் அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று இந்த மந்திரத்தை கூறும்பொழுது அதீத பலம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மந்திரம் நமாமி சங்கர பவாமி சங்கரஉமா மஹேச்வர தவ சரணம்ஹரஹர ஹரஹர ஹரஹர சம்போஅர்தனாரீச்வர தவ சரணம்சிவசிவ சிவசிவ சிவசிவ சம்போஸ்ரீசைலேச்வரா தவ சரணம். இதையும் படிக்கலாமே: துளசி திருமணம் செய்த பலனை பெற உதவும் துளசி வழிபாடு முக்தியை தரக்கூடிய தெய்வமான சிவபெருமானின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கு சிவபெருமானுக்குரிய தினமான பிரதோஷ நாள் அன்று இந்த மந்திரத்தை முழுமனதோடு கூறினால் அனைத்து விதமான நன்மைகளையும், சிவபெருமானின் அருளையும் பரிபூரணமாக பெற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறகிடைக்கும். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/slogam/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%ae%be/

Comments

Popular posts from this blog

லலிதா நவரத்தின மாலை: Lalitha Navarathna Malai Lyrics

Garuda Dandakam Lyrics in Tamil

Avanithanile Piranthu Lyrics in Tamil