தீராத நோய் தீர்க்கும் சிரஞ்சீவி மந்திரம்

[ad_1] - Advertisement - நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இன்றைய காலத்தில் பலரும் பணத்தை சேர்க்க வேண்டும் என்ற ஆசையில் தங்களுடைய உடல் நலனில் கவனம் இல்லாமல் செயல்படுகிறார்கள். இதனால் அவர்களுக்கு ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சினைகளால் அவர்கள் சம்பாதித்த பணமும் காலியாகிறது, மனநிலையும் மாறுபடுகிறது, உடல் ஆரோக்கியமும் கெட்டுவிடுகிறது. இவை அனைத்தையும் சரி செய்வதற்கு ஆஞ்சநேயரை நினைத்து கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். சிரஞ்சீவி மந்திரம் ஒருவருக்கு நோய் என்பது ஏற்படாத அளவிற்கு பார்த்துக் கொள்ள வேண்டும். அதையும் மீறி நோய் ஏற்பட்டு விட்டால் அந்த நோயை சரி செய்வதற்குரிய மருத்துவத்தை மேற்கொள்ள வேண்டும். ஒரு சிலருக்கு மருத்துவம் செய்த உடனேயே சரியாகிவிடும். இன்னும் சிலருக்கோ எவ்வளவு மருத்துவரை பார்த்தாலும் எவ்வளவு மருந்துகளை சாப்பிட்டாலும் அந்த நோயிலிருந்து வெளிவர முடியாமல் கஷ்டப்படுவார்கள். இன்னும் சிலரது இல்லத்தில் படுத்த படுக்கையாக இருக்க கூடிய நிலையும் உண்டாகும். இவை அனைத்தையும் சரி செய்வதற்கு ஆஞ்சநேயர் வழிபாடு என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. - Advertisement - ஆஞ்சநேயரை சீதாப்பிராட்டி என்றும் சிரஞ்சீவியாக வாழ வேண்டும் என்று ஆசீர்வாதம் செய்திருக்கிறார். சிரஞ்சீவி என்றால் எப்பொழுதும் வாழக்கூடியவர் என்று அர்த்தம். சாகா வரம் பெற்றவரை தான் சிரஞ்சீவி என்று கூறுவார்கள். ஆஞ்சநேயரை போலவே இன்னும் ஆறு நபர்கள் சிரஞ்சீவி வரத்தை பெற்றவர்களாக திகழ்கிறார்கள். இவர்களை நினைத்து நாம் வழிபாடு செய்தோம் என்றால் நாமும் சிரஞ்சீவியாக வாழ்கிறோமோ இல்லையோ நோய் நொடிகள் இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும். இந்த மந்திரத்தை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நோயிலிருந்து விடுபட வேண்டும் என்று தினமும் 27 முறை கூற வேண்டும். நாங்கள் ஆரோக்கியமாக தான் இருக்கிறோம் எந்தவித நோயின் தாக்குதலும் எங்களுக்கு வரக்கூடாது என்று நினைப்பவர்கள் புதன்கிழமை அல்லது சனிக்கிழமையோ, மாதத்தில் ஒருமுறை வரக்கூடிய மூல நட்சத்திர நாளன்று 108 முறை கூறினால் போதும். இந்த மந்திரத்தை கூறுவதன் மூலம் நமக்கு எந்தவித நோயின் தாக்குதலும் உண்டாகாது. நீண்ட நாட்களாக மருந்து சாப்பிட்டு கொண்டு இருப்பவர்கள் இந்த மந்திரத்தை உச்சரித்த பிறகு மருந்து சாப்பிட விரைவிலேயே அந்த நோயின் தாக்கம் என்பது குறைய ஆரம்பிக்கும். மேலும் அகால மரணம் ஏற்படாத அளவிற்கு நமக்கு ஒரு பாதுகாப்பு கவசம் ஆகவும் இந்த மந்திரம் திகழ்கிறது. - Advertisement - இந்த மந்திரத்தை பிரம்ம முகூர்த்த நேரத்தில் உச்சரிக்க வேண்டும். கையில் ஒரு தீர்த்த பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சுத்தமான தண்ணீரை ஊற்றுங்கள். பிறகு அதில் இரண்டு அருகம்புல்லைப் போட வேண்டும். வடக்கு பார்த்தவாறு ஒரு விரிப்பை விரித்து அதில் அமர்ந்து கொண்டு கையில் இந்த தீர்த்தத்தை வைத்துக்கொண்டு பின்வரும் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். உச்சரித்து முடித்த பிறகு அந்த தீர்த்தத்தை குடித்து விட வேண்டும். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தான் இந்த மந்திரத்தை கூற வேண்டும் என்று இல்லை. அவர்களுக்கு பதிலாக வேறு யார் வேண்டுமானாலும் கூறலாம். கூறி முடித்த பிறகு அந்த தீர்த்தத்தை அவர்களுக்கு பருக கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மந்திரம் ஆஷ்வத்தாமா பலிர்வ்யாஸோஹனூமான்ச விபீஷனஹ!கிருப பரசுராமஷ்சசப்தைதே சிரஞ்சீவினஹ!! - Advertisement - சப்தைதான் சம்ஸ்மரேன் நித்யம்மார்கண்டேய மதாஷ்டமம்!ஜீவேத் வர்ஷ ஷதம் ஸோபிசர்வ வியாறி விவர்ஜித!! இதையும் படிக்கலாமே:கடன் பிரச்சினை காணாமல் போக கார்த்திகை மாதத்தில் ஏற்ற வேண்டிய தீபம் சப்த சிரஞ்சீவிகளாக திகழக்கூடியவர்கள் அனுமன், விபீஷணர், மகாபலி சக்கரவர்த்தி, மார்க்கண்டேயர், வியாசர், பரசுராமர், அசுவத்தாமன். இவர்களில் யாரை வேண்டுமானாலும் நினைத்து அவர்களுடைய மந்திரத்தை முழுமனதோடு உச்சரிப்பவர்களுக்கு நோய் நொடிகள் இல்லாத நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கை அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/slogam/%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf/

Comments

Popular posts from this blog

ஹர ஹர சிவனே அருணாசலனே: Hara Hara Sivane Arunachalane

வேல் விருத்தம் - Vel Virutham Lyrics in Tamil

Avanithanile Piranthu Lyrics in Tamil