சஷ்டி விரதம் முதல் நாள் செய்ய வேண்டியது

[ad_1] - Advertisement - விரதங்களில் கடுமையான விரதம் என்று சொல்லப்படுவது சஷ்டி விரதம். முருகனின் பால் பேரன்பு கொண்டவர்கள் இந்த சஷ்டி விரதத்தை சிரத்தையுடன் இருந்து முருகனின் அருளை பரிபூரணமாக பெற வழிபாடு செய்வார்கள். அப்படியான இந்த விரத முறைகளை இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோரால் பின்பற்ற முடியவதில்லை. இதற்கு அவர்களுடைய வேலை சூழ்நிலை ஒரு புறம் இருந்தாலும் உடல் நிலையும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. இப்படியான சூழ்நிலையில் முருகனின் அருளை சஷ்டி விரதம் இல்லாமலும் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. அது எப்படி என்று தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். சஷ்டி விரதத்தின் முதல் நாளில் செய்ய வேண்டியது நாளைய தினம் இரண்டு 2.11.2024 சனிக்கிழமை அன்று காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் கட்டாயமாக எழுந்து விட வேண்டும். அதன் பிறகு அன்றைய தினத்தில் உங்கள் வீட்டில் பூஜை அறையில் முருகர் படம் சிலை அல்லது வேல் இருந்தால் அதற்கு முன்பாக ஒரு நெய் தீபம் கண்டிப்பாக ஏற்ற வேண்டும். இத்துடன் முருகருக்கு உங்களால் முடிந்த எளிமையான பூஜை முறை செய்யுங்கள். - Advertisement - இந்த தீபம் எரியும் நேரத்தில் ஓம் நமோ சரவண பவ என்ற இந்த முருகனின் மந்திரத்தை 108 முறை கட்டாயம் சொல்ல வேண்டும். மேலும் கந்த சஷ்டி கவசம், கந்தகுரு கவசம், இதைத் தவிர கந்தனின் வேறு எந்த மந்திரங்கள, வழிபாடுகள் தெரிந்தாலும் அன்றைய தினத்தில் செய்வது சிறந்தது. இது மட்டும் இன்றி விரதம் தொடங்கும் அந்த நாளில் உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு முருகன் ஆலயத்திற்கு கட்டாயமாக சென்று முருகனை வழிபாடு செய்யுங்கள். அதே போல் மாலை 5 மணிக்கு மேல் இரவு 9 மணிக்குள்ளாக உங்களால் எப்பொழுது முடியுமோ அப்போது பூஜை அறையில் மீண்டும் ஒரு அகல் விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றுங்கள். இந்த நேரத்திலும் முடிந்தால் இந்த மந்திரத்தை சொல்லுங்கள் அல்லது வீட்டில் கந்த சஷ்டி கவசம் கந்த குரு கவசம் போன்றுவற்றை ஒழிக்க விட்டு கேளுங்கள். இந்த வழிபாடு செய்யும் நேரத்தில் உங்களால் முடிந்தால் எளிமையான நெய்வேத்தியம் வைக்கலாம் அல்லது வெற்றிலை பாக்கு பழம் வைத்தால் போதும். - Advertisement - இவற்றையெல்லாம் செய்வதோடு அன்றைய தினம் யாரேனும் ஒருவருக்கு அன்னதானம் செய்வது மிகவும் அவசியம். தெய்வங்களில் அருளை முழுவதுமாக பெற வேண்டுமெனில் முதலில் இது போன்ற புண்ணிய காரியங்களை செய்ய வேண்டியது அவசியம். அதிலும் இல்லாதவருக்கு செய்யும் உதவியானது இறைவனுக்கே செய்யும் உதவியாக கருதப்படுகிறது. ஆகையால் அன்றைய தினத்தில் அன்னதானத்தை தவறாமல் செய்து விடுங்கள். இதை மட்டும் நாளைய தினம் தவறாமல் செய்து விட்டால் போதும். முருகனின் அருளை பரிபூரணமாக பெறலாம் இதை தவிர்த்து சஷ்டியை விரதம் இருப்பவர்கள் எப்போதும் போல் விரதம் இருங்கள் விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களும் இந்த மந்திர வழிபாட்டை செய்யலாம் அதுமட்டுமின்றி வீட்டில் வேல் வைத்திருப்பவர்கள் நாளைய தினத்தில் கட்டாயமாக காய்சாத பால் கொண்டு அபிஷேகம் செய்து முருகனை வழிபாடு செய்வது சிறந்தது. இதையும் படிக்கலாமே:சஷ்டி விரதம் இருக்கும் முறைகந்தா என்றாலே நம் வந்து நிற்கும் கலியுக கடவுளின் பரிபூரண அருளை பெற நினைப்பவர்கள் நாளைய சஷ்டி விரத தொடக்க நாளில் இதை போன்று எளிமையாக வழிபாடு செய்து பெறலாம். நம்பிக்கையுடன் வழிபட்டு கந்தனின் அருளுடன் நல்ல முறையில் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வணங்கி கொள்கிறோம். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/slogam/%e0%ae%9a%e0%ae%b7%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a/

Comments

Popular posts from this blog

ஹர ஹர சிவனே அருணாசலனே: Hara Hara Sivane Arunachalane

வேல் விருத்தம் - Vel Virutham Lyrics in Tamil

Avanithanile Piranthu Lyrics in Tamil