குபேர வசிய மந்திரம் | kubera vasiya manthiram in tamil

[ad_1] - Advertisement - தீபத்திருநாளாக திகழ்வதுதான் தீபாவளி. தீபாவளி அன்று பலரும் பலவிதமான வழிபாட்டு முறைகளை பின்பற்றுவார்கள், பூஜைகளை செய்வார்கள். அதிலும் குறிப்பாக மார்வாடிகள் தங்கள் இல்லத்தில் லட்சுமி குபேர பூஜையை செய்வது வழக்கமாகவே வைத்திருப்பார்கள். அதனால் தான் அவர்கள் இன்றளவும் செல்வ செழிப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி குபேரரை நம் வசப்படுத்துவதற்கு கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். குபேர வசிய மந்திரம் ஒருவர் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்றால் அதற்கு மகாலட்சுமியின் அருள் என்பது கண்டிப்பாக வேண்டும். என்னதான் மகாலட்சுமியின் அருள் இருந்தாலும் அவருடைய செல்வத்தை பாதுகாக்க கூடிய குபேரரின் அருள் கிடைத்தால் தான் மகாலட்சுமி நினைத்தாலே செல்வத்தை தர முடியும். அதனால் நாம் ஒவ்வொருவரும் எந்த அளவிற்கு மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்கிறோமோ அதே அளவிற்கு குபேர வழிபாட்டையும் மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட குபேரரின் அருளை பெறுவதற்கு உதவக்கூடிய மந்திரத்தை பற்றி தான் பார்க்க போகிறோம். - Advertisement - தீபாவளி அன்று பலரும் மாலை நேரத்தில் மகாலட்சுமி பூஜையை செய்வார்கள். ஒரு சிலர் லட்சுமி குபேர பூஜை செய்வார்கள். இன்னும் சிலரோ குபேர பூஜை செய்வார்கள். தீபாவளி அன்று குபேரருக்குரிய இந்த மந்திரத்தை நாம் கூறுவதன் மூலம் நமக்கு அஷ்ட ஐஸ்வரியம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. தீபாவளியை தொடர்ந்து வரும் 9 நாட்களும் இந்த மந்திரத்தை கூறிக் கொண்டே வந்தோம் என்றால் நாம் எதிர்பார்க்காத அளவிற்கு நமக்கு பணவரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும் என்றும் தடைபட்டிருந்த பணவரவு விரைவில் நம்மை தேடி வருவதற்குரிய வழிகள் பிறக்கும் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட குபேர பூஜை பற்றி தெரிந்து கொள்வோம். இதற்கு நம் வீட்டில் குபேரரின் படம் இருக்க வேண்டும் அல்லது குபேர எந்திரம் இருந்தால் கூட உபயோகப்படுத்தலாம். குபேரன் எந்திரமோ, குபேர படமோ இல்லை என்பவர்கள் மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக கூட இந்த பூஜையை செய்யலாம். மகாலட்சுமி தாயாரின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு அகல் விளக்கில் நெய் ஊற்றி பச்சை நிற திரியை போட்டு தீபம் ஏற்ற வேண்டும்வேண்டும். பிறகு மகாலட்சுமி தாயாருக்கும் முன்பாக ஒரு தாம்பாள தட்டை வைத்துக் கொள்ளுங்கள். 9 நாணயங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். - Advertisement - இது வெள்ளி நாணயமாக இருந்தால் மிகவும் சிறப்பு. அப்படி வெள்ளி நாணயம் இல்லை என்பவர்கள் ஐந்து ரூபாய் நாணயத்தையோ அல்லது ஒரு ரூபாய் நாணயத்தையோ எடுத்து வைத்துக் கொள்ளலாம். இந்த நாணயங்களை பன்னீரில் சுத்தம் செய்து கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் நாம் பூஜை செய்யும் பொழுது இந்த நாணயத்திலிருந்து ஒவ்வொரு நாணயத்தையும் எடுத்து சந்தனம் குங்குமம் வைத்து மகாலட்சுமிக்கு முன்பாக இருக்கக்கூடிய தாம்பாலத்தில் வைத்து விட வேண்டும், பிறகு இந்த குபேர வசிய மந்திரத்தை நாம் கூறினோம் என்றால் குபேரரின் அருளும் மகாலட்சுமி தாயாரின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மந்திரம் ஆவாஹயாமி தேவ! த்வமிஹாயாஹி க்ருபாம் குரு கோசம் வர்த்தய நித்யம் த்வம் பரிரக்ஷ ஸுரேஸ்வர தனாத்ய க்ஷாய தேவாய நரயானோபவேஸுனே நமஸ்தே ராஜ ராஜாய குபேராய மஹாத்மானே இதையும் படிக்கலாமே:தீபாவளி அன்று கூற வேண்டிய மந்திரங்கள் தீபாவளியை தொடர்ந்து வரக்கூடிய 9 நாட்களும் இந்த குபேரரின் வசிய மந்திரத்தை முழுமனதோடு கூறி வழிபாடு செய்பவர்களுக்கு குபேரரின் அருள் பரிபூரணமாக கிடைத்து செல்வ செழிப்புடனும் அஷ்ட ஐஸ்வரியத்துடனும் வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/slogam/%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0-%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-kubera-vasiya-manthiram-in-tamil/

Comments

Popular posts from this blog

ஹர ஹர சிவனே அருணாசலனே: Hara Hara Sivane Arunachalane

வேல் விருத்தம் - Vel Virutham Lyrics in Tamil

Avanithanile Piranthu Lyrics in Tamil