கோடி புண்ணியம் தரும் சிவ மந்திர வழிபாடு

[ad_1] - Advertisement - நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலிலும் நமக்கு நன்மைகளும் உண்டாகும், அதே சமயம் தீமைகளும் உண்டாகும். அப்படி தீமைகள் ஏற்படும் பொழுது அதனால் நம்முடைய கர்ம வினைகள் அதிகரித்து கஷ்டங்கள் ஏற்படும். இதே நன்மைகள் ஏற்படும் பொழுது அந்த நன்மைகளின் விளைவால் நம்முடைய புண்ணிய கணக்கு அதிகரித்து, மீண்டும் பிறவாமை நிலை என்பது உண்டாக்கும். இந்த புண்ணிய கணக்கை அதிகரிப்பதற்காக தான் நாம் தான தர்மங்களை செய்கிறோம். கர்ம வினைகள் குறைய குறைய தான் புண்ணியம் என்பது அதிகரிக்கும். அப்படிப்பட்ட புண்ணியத்தை பெறுவதற்கு சனி மகா பிரதோஷ நாள் அன்று கூற வேண்டிய சிவ மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். சிவ மந்திர வழிபாடு 2024 ஆம் ஆண்டு வரக்கூடிய கடைசி பிரதோஷம் தான் டிசம்பர் மாதம் 28ஆம் தேதி வருகிறது. அன்றைய தினம் சனிக்கிழமை என்பதால் அது சனி மகா பிரதோஷமாக திகழ்கிறது. மற்ற பிரதோஷ நாட்களில் கிடைக்கக்கூடிய பலனை விட பல மடங்கு அதிக அளவு பலன் என்பது சனி மகா பிரதோஷ நாளில் நமக்கு கிடைக்கும் என்பதால் வருடம் முழுவதும் பிரதோஷ விரதம் இருக்காதவர்கள் கூட, சிவ வழிபாட்டை செய்யாதவர்கள் கூட சனி மகா பிரதோஷ நாளில் விரதம் இருந்து சிவ வழிபாட்டை மேற்கொள்ளலாம். அப்படி நாம் செய்யக்கூடிய ஒரு சிவ வழிபாட்டையும் மந்திரத்தையும் பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம். - Advertisement - டிசம்பர் மாதம் 28ஆம் தேதி காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் அல்லது 7:45 மணியிலிருந்து 8:45 மணிக்குள் அல்லது 10:45 மணியிலிருந்து 11:45 மணிக்குள் அல்லது மாலை 4:30 மணியிலிருந்து 5:30 மணிக்குள் அல்லது 6:00 மணியிலிருந்து 8:30 மணிக்குள் இந்த வழிபாட்டை நாம் மேற்கொள்ளலாம். இந்த நேரங்களில் எந்த நேரம் தங்களுடைய வசதிக்கு ஏற்ப இருக்கிறதோ அந்த நேரத்தில் இந்த வழிபாட்டை நாம் செய்யலாம். வீட்டில் இருக்கக் கூடிய சிவபெருமானின் லிங்கமாக இருந்தாலும், சிலையாக இருந்தாலும், படமாக இருந்தாலும் அதை சுத்தம் செய்து அதற்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். சிவபெருமானுக்கு வாசனை மிகுந்த மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். இயன்றவர்கள் அருகம்புல்லை நந்திக்கும், வில்வ இலையை சிவபெருமானுக்கும் வைக்கலாம். - Advertisement - பிறகு அவர்களுக்கு முன்பாக ஒரு அகல்விளக்கில் தீபம் ஏற்றி வைத்து தங்களால் இயன்ற ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். இப்படி வைத்து முடித்த பிறகு ‘ஓம் சம்போ சிவ சம்போ” என்னும் இந்த மந்திரத்தை 308 முறை முழு மனதோடு ஆத்மார்த்தமாக வாய்விட்டு கூற வேண்டும். இப்படி நாம் கூறுவதன் மூலம் இந்த மந்திரத்தின் அதிர்வலைகள் நம்மிடம் இருக்கக்கூடிய கர்ம வினைகளை நீக்குவதோடு நமக்கு கோடி புண்ணியத்தையும் தரும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் நமக்கு செல்வ செழிப்பு ஏற்படும். பாவங்களும் தோஷங்களும் விலகும் என்று கூறப்படுகிறது. இதையும் படிக்கலாமே:பானு சப்தமி அன்று ஏற்ற வேண்டிய தீபம்மிகவும் சக்தி மிகுந்த இந்த சிவ மந்திரத்தை சனி மகா பிரதோஷ நாளில் முழு மனதோடு கூறுபவர்களுக்கு கோடி புண்ணியம் உண்டாகும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை முழு மனதோடு கூறி முழுமையான பலனை பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam href="https://telegram.me/tamil_astrology_nithyasubam">https://telegram.me/tamil_astrology_nithyasubam https://nithyasubam.in/tamil/slogam/%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5/?feed_id=3700&_unique_id=676f43f98d013

Comments

Popular posts from this blog

லலிதா நவரத்தின மாலை: Lalitha Navarathna Malai Lyrics

Garuda Dandakam Lyrics in Tamil

Avanithanile Piranthu Lyrics in Tamil