பிறந்த நட்சத்திரத்திற்கான தேவார பாடல்கள்: Nakshatra Thevaram Songs

[ad_1] Thevaram Songs for the Birthday Star in Tamil தம் பிறந்த நட்சத்திரத்தின் பாடலை தினமும் மூன்று முறை பாடிக் கொண்டு சிவபெருமானை வழிபடுவோர், நவக்கிரக தோஷங்கள் நீங்கி நிம்மதியான வாழ்வைப் பெறுவர். அசுவினி தக்கார்வம் எய்திசமண் தவிர்ந்து உந்தன் சரண் புகுந்தேன்எக்கால் எப்பயன் நின் திறம் அல்லால் எனக்கு உளதேமிக்கார் தில்லையுள் விருப்பா மிக வடமேரு என்னும்திக்கா! திருச்சத்தி முற்றத்து உறையும் சிவக்கொழுந்தே. பரணி கரும்பினும் இனியான் தன்னைக் காய்கதிர்ச் சோதியானைஇருங்கடல் அமுதம் தன்னை இறப்பொடு பிறப்பு இலானைப்பெரும்பொருள் கிளவியானைப் பெருந்தவ முனிவர் ஏத்தும்அரும்பொனை நினைந்த நெஞ்சம் அழகிதாம் நினைந்தவாறே. கார்த்திகை/கிருத்திகை செல்வியைப் பாகம் கொண்டார் சேந்தனை மகனாக் கொண்டார்மல்லிகைக் கண்ணியோடு மாமலர்க் கொன்றை சூடிக்கல்வியைக் கரை இலாத காஞ்சி மாநகர் தன்னுள்ளார்எல்லிய விளங்க நின்றார் இலங்கு மேற்றளியனாரே. ரோகிணி எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைந்தால்அங்கே வந்து என்னோடும் உடன் ஆகி நின்றருளிஇங்கே என் வினையை அறுத்திட்டு எனை ஆளும்கங்கா நாயகனே கழிப்பாலை மேயோனே. மிருக சீரிடம் பண்ணின் இசை ஆகி நின்றாய் போற்றி, பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றிஎண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி, என் சிந்தை நீங்கா இறைவா போற்றிவிண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி, மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றிகண்ணின் மணி ஆகி நின்றாய் போற்றி, கயிலை மலையானே போற்றி போற்றி! திருவாதிரை/ஆதிரை கவ்வைக் கடல் கதறிக் கொணர் முத்தம் கரைக்கு ஏற்றக்கொவ்வைத் துவர் வாயார் குடைந்து ஆடும் திருச்சுழியல்தெய்வத்தினை வழிபாடு செய்து எழுவார் அடி தொழுவார்அவ்வத் திசைக்கு அரசு ஆகுவர் அலராள் பிரியாளே. புனர்பூசம் மன்னும் மலைமகள் கையால் வருடின மாமறைகள்சொன்ன துறைதொறும் தூப்பொருள் ஆயின தூக்கமலத்துஅன்னவடிவின அன்புடைத் தொண்டர்க்கு அமுது அருத்திஇன்னல் களைவன இன்னம்பரான் தன் இணை அடியே. பூசம் பொருவிடை ஒன்றுடைப் புண்ணிய மூர்த்திப் புலி அதளன்உருவுடை அம்மலைமங்கை மணாளன் உலகுக்கு எல்லாம்திருவுடை அந்தணர் வாழ்கின்ற தில்லை சிற்றம்பலவன்திருவடியைக் கண்ட கண்கொண்டு மற்று இனிக் காண்பது என்னே. ஆயில்யம் கருநட்ட கண்டனை அண்டத் தலைவனைக் கற்பகத்தைச்செருநட்ட மும்மதில் எய்ய வல்லானைச் செந்நீ முழங்கத்திருநட்டம் ஆடியைத் தில்லைக்கு இறையைச் சிற்றம்பலத்துப்பெருநட்டம் ஆடியை வானவர் கோன் என்று வாழ்த்துவனே. மகம் பொடி ஆர் மேனியனே! புரிநூல் ஒருபால் பொருந்தவடி ஆர் மூவிலை வேல் வளர் கங்கையின் மங்கையொடும்கடிஆர் கொன்றையனே! கடவூர் தனுள் வீரட்டத்து எம்அடிகேள்! என் அமுதே! எனக்கு ஆர்துணை நீ அலதே. பூரம் நூல் அடைந்த கொள்கையாலே நுன் அடி கூடுதற்குமால் அடைந்த நால்வர் கேட்க நல்கிய நல்லறத்தைஆல் அடைந்த நீழல் மேவி அருமறை சொன்னது என்னேசேல் அடைந்த தண்கழனிச் சேய்ன்ஞலூர் மேயவனே. உத்திரம் போழும் மதியும் புனக் கொன்றைப் புனர்சேர் சென்னிப் புண்ணியா!சூழம் அரவச் சுடர்ச் சோதீ உன்னைத் தொழுவார் துயர் போகவாழும் அவர்கள் அங்கங்கே வைத்த சிந்தை உய்த்து ஆட்டஆழும் திரைக்காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளே. அஸ்தம் வேதியா வேத கீதா விண்ணவர் அண்ணா என்றுஓதியே மலர்கள் தூவி ஒருங்கு நின் கழல்கள் காணப்பாதி ஓர் பெண்ணை வைத்தாய் படர் சடை மதியம் சூடும்ஆதியே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே. சித்திரை நின் அடியே வழிபடுவான், நிமலா! நினைக் கருத,“என் அடியான் உயிரை வவ்வேல்!” என்று அடல் கூற்று உதைத்தபொன் அடியே பரவி, நாளும் பூவொடு நீர் சுமக்கும்நின் அடியார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே! சுவாதி காவினை இட்டும் குளம் பல தொட்டும் கனி மனத்தால்ஏவினையால் எயில் மூன்று எரித்தீர் என்று இருபொழுதும்பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாம் அடியோம்தீவினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம். விசாகம் விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை வேதம் தான் விரித்து ஓத வல்லனைநண்ணினார்க்கு என்றும் நல்லவன் தன்னை நாளும் நாம் உகக்கின்ற பிரானைஎண்ணில் தொல்புகழாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்றகண்ணும் மூன்று உடைக் கம்பன் எம்மானைக் காணக் கண் அடியேன் பெற்றவாறே. அனுஷம் மயிலார் சாயல் மாது ஓர் பாகமாஎயிலார் சாய எரித்த எந்தை தன்குயிலார் சோலைக் கோலக்காவையேபயிலா நிற்கப் பறையும் பாவமே. கேட்டை முல்லை நன்முறுவல் உமை பங்கனார்தில்லை அம்பலத்தில் உறை செல்வனார்கொல்லை ஏற்றினர் கோடிகாவா என்று அங்குஒல்லை ஏத்துவார்க்கு ஊனம் ஒன்று இல்லையே. மூலம் கீளார் கோவணமும் திருநீறும் மெய்பூசி உன் தன்தாளே வந்து அடைந்தேன் தலைவா எனை ஏற்றுக்கொள் நீவாள் ஆர் கண்ணி பங்கா! மழபாடியுள் மாணிக்கமேஆளாய் நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. பூராடம் நின் ஆவார் பிறர் அன்றி நீயே ஆனாய் நினைப்பார்கள் மனத்துக்கு ஓர் வித்தும் ஆனாய்மன் ஆனாய் மன்னவர்க்கு ஓர் அமுதம் ஆனாய் மறை நான்கும் ஆனாய் ஆறு அங்கம் ஆனாய்பொன் ஆனாய் மணி ஆனாய் போகம் ஆனாய் பூமி மேல் புகழ்தக்கப் பொருளே உன்னைஎன் ஆனாய் என் ஆனாய் என்னின் அல்லால் ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே. உத்திராடம் குறைவிலா நிறைவே குணக்குன்றே கூத்தனே குழைக்காது உடையோனேஉறவு இலேன் உனை அன்றி மற்று அறியேன் ஒரு பிழை பொறுத்தால் இழிவு உண்டேசிறைவண்டு ஆர் பொழில் சூழ்திருவாரூர்ச் செம்பொனே திருவடுதுறையுள்அறவோனே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே திருவோணம்/ஓணம் வேதம் ஓதி வெண்நூல் பூண்ட வெள்ளை எருது ஏறிபூதம் சூழப் பொலிய வருவார் புலியின் உரிதோலார்நாதா எனவும் நக்கா எனவும் நம்பா என நின்றுபாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழன நகராரே. அவிட்டம் எண்ணும் எழுத்தும் குறியும் அறிபவர் தாம் மொழியப்பண்ணின் இடைமொழி பாடிய வானவரதா பணிவார்திண்ணென் வினைகளைத் தீர்க்கும் பிரா திருவேதிக்குடிநண்ணரிய அமுதினை நாம் அடைந்து ஆடுதுமே. சதயம் கூடிய இலயம் சதி பிழையாமைக் கொடி இடை இமையவள் காணஆடிய அழகா அருமறைப் பொருளே அங்கணா எங்கு உற்றாய் என்றுதேடிய வானோர் சேர் திருமுல்லை வாயிலாய் திருப்புகழ் விருப்பால்பாடிய அடியேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே. பூரட்டாதி முடி கொண்ட மத்தமும் முக்கண்ணனின் நோக்கும் முறுவலிப்பும்துடிகொண்ட கையும் துதைந்த வெண்ணீறும் சுரிகுழலாள்படி கொண்ட பாகமும் பாய்புலித் தோலும் என் பாவி நெஞ்சில்குடி கொண்டவா தில்லை அம்பலக் கூத்தன் குரை கழலே. உத்திரட்டாதி நாளாய போகாமே நஞ்சு அணியும் கண்டனுக்குஆளாய அன்பு செய்வோம் மட நெஞ்சே அரன் நாமம்கேளாய் நம் கிளை கிளைக்கும் கேடுபடாத்திறம் அருளிக்கோள் ஆய நீக்குமவன் கோளிலி எம்பெருமானே. ரேவதி நாயினும் கடைப்பட்டேனை நன்னெறி காட்டி ஆண்டாய்ஆயிரம் அரவம் ஆர்த்த அமுதனே அமுதம் ஒத்துநீயும் என் நெஞ்சினுள் நிலாவிளாய்நிலாவி நிற்கநோயவை சாரும் ஆகில் நோக்கி நீ அருள் செய்வாயே. திருச்சிற்றம்பலம் [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam href="https://telegram.me/tamil_astrology_nithyasubam">https://telegram.me/tamil_astrology_nithyasubam https://nithyasubam.in/tamil/slogam/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95/?feed_id=3528&_unique_id=67630c3308d42

Comments

Popular posts from this blog

ஹர ஹர சிவனே அருணாசலனே: Hara Hara Sivane Arunachalane

வேல் விருத்தம் - Vel Virutham Lyrics in Tamil

Avanithanile Piranthu Lyrics in Tamil