கோரிக்கை நிறைவேற பரிகாரம் | Korikkai niraiver in Tamil

[ad_1] - Advertisement - நம்முடைய வாழ்க்கையில் நமக்கு ஏதாவது ஒரு விஷயம் என்பது தேவைப்படும். அது பணமாக இருக்கலாம், பொருளாக இருக்கலாம், வேலையாக இருக்கலாம், படிப்பாக இருக்கலாம், திருமணம், குழந்தை பாக்கியம் என்று எது வேண்டுமானாலும் இருக்கலாம். அதை பெறுவதற்கான முயற்சியையும் நாம் செய்வோம். அப்படி செய்யக்கூடிய முயற்சிகள் வெற்றி அடைவதற்காக இறைவனிடம் வழிபாடும் செய்வோம். அப்படி செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரம் பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். எந்த ஒரு விஷயம் நமக்கு தேவையோ அந்த விஷயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இறைவனிடம் கோரிக்கை வைப்பது உண்டு, இதை வேண்டுதல் என்று கூட கூறலாம். நம்முடைய இஷ்ட தெய்வம் எதுவாக இருந்தாலும், குலதெய்வம் எதுவாக இருந்தாலும் இந்த முறையில் நாம் பரிகாரம் செய்யும் பொழுது அந்த கோரிக்கை என்பது விரைவிலேயே நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த கோரிக்கையை நாம் வைக்கக்கூடிய நாள் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அந்த வகையில் ஜனவரி ஒன்றாம் தேதி இந்த முறையில் நாம் கோரிக்கை வைத்தோம் என்றால் இந்த வருடத்திற்குள் அந்த கோரிக்கை நிறைவேறும் என்று கூறப்படுகிறது. - Advertisement - இந்த கோரிக்கையை ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி இரவு 12:00 மணிக்குள் செய்துவிட வேண்டும். இதற்கு நமக்கு பெரிதும் கடைக்கு சென்று வாங்க வேண்டியது என்று எதுவும் இருக்காது. வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்தே நாம் இந்த கோரிக்கையை வைத்துவிடலாம். இதற்கு நமக்கு நவதானியங்களில் ஏதாவது ஒரு தானியம் வேண்டும். அது நல்ல சுத்தமான தானியமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பச்சரிசி, கோதுமை, துவரம் பருப்பு, பச்சை பயிறு இப்படி ஏதாவது ஒரு தானியத்தை தேர்வு செய்து அந்த தானியம் சுத்தமாக இருப்பது போல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் அந்த தானியத்தை நாம் நீண்ட நாட்கள் வைத்திருக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அதனால் அது பூச்சி வைக்காத அளவிற்கு சுத்தமானதாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. - Advertisement - இந்த தானியத்தை போட்டு வைப்பதற்கு ஒரு சிறிய மூடி போட்ட ஒரு பாட்டில் ஒன்று வேண்டும். அடுத்ததாக ஒரு வெள்ளை நிற பேப்பரில் உங்களுடைய கோரிக்கை என்னவோ ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் முன்வைத்து அதில் எழுதிக் கொள்ளுங்கள். எழுதிய அந்த பேப்பரை மடித்து நாம் பாட்டிலுக்குள் தானியத்தை போட்டு வைத்திருப்போம் அல்லவா? அதற்குள்ளே போட்டு அந்த பேப்பர் தெரியாத அளவிற்கு உள்ளே வைத்து விடுங்கள். இதை மூடி நம்முடைய வீட்டின் வடமேற்கு மூலையில் வைக்க வேண்டும். வாஸ்து ரீதியாக கட்டக்கூடிய வீடுகள் அனைத்திலும் வடமேற்கில் கழிவறை இருக்க வாய்ப்புகள் உள்ளது. இந்த தானியத்தை கழிவறைக்குள் வைக்கக்கூடாது. அதை தவிர்த்து வடமேற்கு மூலையில் இந்த பாட்டிலை யாருடைய கையும் படாத அளவிற்கும், ஈரம் படாத மாதிரி வைக்க வேண்டும். எப்பொழுது உங்களுடைய கோரிக்கையை நிறைவேறுகிறதோ அப்பொழுது இந்த தானியத்தையும் அதில் இருக்கக்கூடிய அந்த பேப்பரையும் அருகில் இருக்கக்கூடிய அரச மரத்தடியில் கொண்டு போய் வைத்து விட வேண்டும். - Advertisement - ஜனவரி 1ஆம் தேதி இந்த முறையில் நாம் பரிகாரம் செய்து நம்முடைய கோரிக்கையை நாம் முன் வைத்தோம் என்றால் அந்த கோரிக்கை அந்த வருடத்திற்குள்ளாகவே நிறைவேறிவிடும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொருவருடைய கர்ம வினை பொறுத்து நிறைவேறுவதற்குரிய காலம் என்பது அதிகரிக்கலாம். இதையும் படிக்கலாமே: 2025 இல் 12 ராசிக்காரர்களும் கவனம் முழு நம்பிக்கையுடன் ஜனவரி ஒன்றாம் தேதி இந்த பரிகாரத்தை செய்து கோரிக்கை வைப்பவர்களுக்கு அந்த கோரிக்கை விரைவிலேயே நிறைவேறும். முழு மனதோடு முழு நம்பிக்கையுடனும் செய்து பலனை பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam href="https://telegram.me/tamil_astrology_nithyasubam">https://telegram.me/tamil_astrology_nithyasubam https://nithyasubam.in/tamil/slogam/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%87%e0%ae%b1-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae/?feed_id=3918&_unique_id=6781b4fec68d6

Comments

Popular posts from this blog

ஹர ஹர சிவனே அருணாசலனே: Hara Hara Sivane Arunachalane

வேல் விருத்தம் - Vel Virutham Lyrics in Tamil

Avanithanile Piranthu Lyrics in Tamil