புத்திசாலித்தனத்துடன் சிறப்பான வாழ்க்கை வாழ | Puththisalithanathudan vazha pariharam

[ad_1] - Advertisement - வாரத்தில் ஏழு நாட்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு விதமான கிரகங்களின் ஆதிக்கம் என்பது இருக்கும். அந்த கிழமையில் வரக்கூடிய நல்ல நாட்களும் அந்த கிரகங்களின் ஆதிக்கத்தில் தான் செயல்படும். அந்த வகையில் ஜனவரி மாதம் 1ஆம் தேதி என்பது புதன்கிழமை தொடங்குகிறது. புதன் கிழமை என்பது புதன் பகவானுக்குரிய கிழமையாக திகழ்கிறது. புதன் பகவான் ஞான காரகனாக திகழ்கிறார். அப்படிப்பட்ட புதன் பகவானை நாம் இந்த முறையில் ஜனவரி ஒன்றாம் தேதி எந்த முறையில் வழிபாடு செய்தால் நமக்கு சிறப்பான புத்திக் கூர்மையும் சிறந்த வாழ்க்கையும் அமையும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் நன்றாக படிக்கிறார், நல்ல பேச்சாற்றலுடன் திகழ்கிறார், சிறந்த ஓவியராக திகழ்கிறார், விளையாட்டில் சிறந்து விளங்குகிறார் என்று ஏதாவது ஒரு துறை ரீதியாக சிறப்பாக செயல்படுகிறார் என்றால் அவருக்கு புதன் பகவானின் ஆதிக்கம் நன்றாக இருக்கிறது என்று அர்த்தம். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கூறி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட புதன் பகவானுக்குரிய கிழமை அன்று ஜனவரி ஒன்றாம் தேதி பிறப்பது என்பது அதீத விசேஷமான ஒன்று. அந்த நாளில் இந்த முறையில் நாம் வழிபாடு செய்தால் புதன் பகவானின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும். - Advertisement - இந்த வழிபாட்டை ஜனவரி ஒன்றாம் தேதி இரவு 12 மணிக்குள் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு புதன் பகவானுக்குரிய உணவுப் பொருளான கீரை வகைகளில் ஒன்றான கொத்தமல்லி இலை என்பது வேண்டும். மேலும் புதன் பகவானின் ஆதிக்கம் நிறைந்த தானியமாக கருதப்படும் வெந்தயமும் வேண்டும். புதன் பகவானுக்குரிய எண்ணாக பார்க்கும் பொழுது ஐந்து திகழ்கிறது. அதனால் ஐந்து ரூபாய் நாணயமும் வேண்டும். புதன் பகவானுக்குரிய உலோகமாக பித்தளை திகழ்கிறது என்பதால் இந்த வழிபாட்டை செய்யும் பொழுது பித்தளை தட்டை நாம் உபயோகப்படுத்துவது அதிக பலனை தரும். வீட்டு பூஜை அறையில் பித்தளை தட்டை எடுத்து அதற்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி இலையை ஒரு ஓரமாக வைத்துக் கொள்ளுங்கள். மேலும் அதே தாம்பாள தட்டில் ஒரு ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தையும், ஐந்து ரூபாய் நாணயத்தையும் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதே தாம்பாள தட்டில் ஒரு அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். - Advertisement - இந்த தீபம் கிழக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். இந்த தீபத்திற்கு முன்பாக முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்து இந்த தீபமும், கொத்தமல்லியும், வெந்தயமும், நாணயமும் அந்த கண்ணாடியில் பிரதிபலிப்பது போல் வைக்க வேண்டும். கண்ணாடி மேற்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். இந்த கண்ணாடி நாம் எப்பொழுதும் தினமும் பயன்படுத்தக்கூடிய முகம் பார்க்கும் கண்ணாடியாக இருக்கக்கூடாது. பூஜையறையில் வைப்பதற்காகவே ஒரு சிலர் கண்ணாடி வைத்திருப்பார்கள் அந்த கண்ணாடியை பயன்படுத்தலாம் அல்லது இதற்காகவே தனியாக ஒரு கண்ணாடியை வாங்கி வைத்து பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறையில் நாம் தீபம் ஏற்றி புதன் பகவானுக்குரிய உணவுப் பொருளையும் தானியத்தையும் வைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்யும்பொழுது புதன் பகவானின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். மேலும் நமக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளை புத்திசாலித்தனத்துடன் சரி செய்து சிறப்பான வாழ்க்கையும் வாழ அருள் புரிவார். இதையும் படிக்கலாமே: கோரிக்கை நிறைவேற பரிகாரம் ஜனவரி ஒன்றாம் தேதி எப்பொழுதும் செய்யக்கூடிய வழிபாட்டோடு சேர்த்து இந்த ஒரு வழிபாட்டையும் செய்பவர்களுக்கு அவர்களுடைய புத்தி கூர்மை அதிகரிப்பதோடு சிறப்பான வாழ்க்கையும் வாழ்வார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam href="https://telegram.me/tamil_astrology_nithyasubam">https://telegram.me/tamil_astrology_nithyasubam https://nithyasubam.in/tamil/slogam/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a/?feed_id=3763&_unique_id=6775dca72375e

Comments

Popular posts from this blog

ஹர ஹர சிவனே அருணாசலனே: Hara Hara Sivane Arunachalane

வேல் விருத்தம் - Vel Virutham Lyrics in Tamil

Avanithanile Piranthu Lyrics in Tamil